பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 'நான் மூச்சை அடக்கிக் காயசித்தி பெற்று உடம்பைப் பொன் மயமாக வைத்திருக்கிறேன்' என்று விளம்பரப்படுத்திக் கொள்வது யோகத்தின் இலக்கணம் ஆகாது. உடல் பயிற்சி செய்து வித்தை காண்பிக்கிறவர்களைப் போல வேண்டுமானால் ஆசனம் முதலியவைகளைப் போட்டு காட்டிக் கொண்டிருக்க லாம். சில ஆசனங்களைப் பிராணாயாமத்தோடு பழக்கிக் கொள்ள லாம். அதோடு நின்றுவிட்டால் யோகம் கைவரப்பெற்றவர் என்று சொல்ல முடியாது. இறைவனிடத்தில் ஈடுபடுகிற பக்தர்கள் எப்படித் தம்மை மறந்து சமாதி நிலையில் இருக்கிறார்களோ அதுபோல் யோக நிஷ்டர்கள் முடிந்த முடிவில் அந்த அது பவத்தைப் பெறுகிறார்கள். ஞானியானாலும், பக்தனானாலும், கர்ம யோகியானாலும், அஷ்டாங்க யோகம் பண்ணுகிறவர்கள் ஆனாலும் முடிந்த முடிபாகச் சரீராபிமானத்தை மறந்து மேல் நிலையில் உலவுகிற கதியைப் பெற வேண்டும். அதற்குக் கீழே உள்ள படிக்கட்டுகள் பலவகை. அந்தப் படிக்கட்டுகளில் ஏறு வதற்கு மிகவும் அரிதாக இருப்பது யோகப் படிக்கட்டு. அந்த யோகப் படிக்கட்டில் ஏறுகிறவன் முதலில் நல்லவனாக இருக்க வேண்டும். அவன் குணம் தூயதாக இருக்க வேண்டும். அதைத் தான் இயமம் என்கிறார்கள். நியமம் யமம் என்பது வரையறை. இன்ன காரியத்தை இப்படிச் செய்ய வேண்டும், இன்ன உணவு சாப்பிட வேண்டும், இப்படி நீராட வேண்டும் என்று யோகம் செய்பவர்களுக்குச் சில நியதி உண்டு. வாழ்க்கையில் நாம் நியமத்துடன் இருக்க வேண்டும். இயமம் நியமம் ஆகிய இரண்டும் யோகிகளுக்கு மாத்திரம் உள்ளன அல்ல; மனிதனாக உள்ள யாவருக்குமே அந்த இரண்டும் வேண்டும். நல்ல குணங்களும், வரையறையான வாழ்க்கையும் மனிதனுக்கு இன்பம் தரும் என்பதை உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும். உடம்பை வைத்துக் கொண்டு வாழ்கிற நாம் உடம்பை நோய்க்கு உட்படுத்தாமல் இருக்கச் சில நியமங்களுடன் இருக்க வேண்டும். பேச்சில் வரையறை, உணவில் வரையறை, நீராடுவதில் வரையறை ஆகியவை இருந்தால்தான் இந்த உடம்பை வலியதாக வைத்திருக்க முடியும். மனத்தையும் தெளிவு உடையதாக வைத்திருக்கலாம். இத்தகைய நியமங்களைப் 70