பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மனம் வாயுவின் அம்சம் உடையது. மூச்சைக் கட்டினால் மனம் சங்கடப்படும். மனம் தொழில் செய்யாமல் இருக்கிற மயக்கம், மூச்சிலே மயக்க மருந்தை ஊட்டினால் உண்டாகிறது. மூச்சுக்கும் மனத்திற்கும் தொடர்பு உண்டு. ஆசனத்திற்கு அடுத்தபடி நான்கா வதாகப் பிராணாயாமத்தை வைத்திருக்கிறார்கள். ஒரளவு பிராணாயாமம் எல்லோரும் செய்வது நலம். சரியான நிலையில் உட்கார்ந்து பிராணாயாமம் செய்யவேண்டும். சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி வெளியில் விடுவதுதான் பிராணாயாமம். நாம் இப்போது உள்ளே இழுத்து வெளியில் விடுவதோடு நிற்கிறோம். அதை உள்ளே கும்பிக்கவேண்டும். எவ்வளவு நேரம் உள்ளே இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் அடக்க வேண்டும், எவ்வளவு வெளிவிடவேண்டுமென்று யோகத்தில் கணக்கு உண்டு. பிராணாயாமத்திற்குரிய மந்திரம் நாம் செய்யும் சந்தியா வந்தனத்தில் இருக்கிறது. அதில் முன் பகுதியைச் சொல்லி இழுக்கவேண்டும். அந்த மந்திரத்தின் இடையில் உள்ள காயத் திரியைச் சொல்லிக் கும்பிக்கவேண்டும். பிற்பகுதியைச் சொல்லி வெளிவிடவேண்டும். இந்த அப்பியாசத்தினால் மனம் தூயதாகும். ஒரளவு இந்த பிராணாயாமத்தில் வெற்றி கண்டவனுக்கு நெடு நேரம் இருந்து ஜபம் செய்கிற பயிற்சி உண்டாகும். பிராணா யாமத்தை முறையாகச் சுவாச பந்தனமாக்கி மூலாதாரத்தில் இருக்கும் அக்கினியை மேலே எழுப்புவதற்குரிய வழியில் பயிற்சி செய்பவன் யோகி ஆகிறான். மூன்று நாடிகள் l மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரம் வரைக்கும் மூன்று ாடிகள் இருக்கின்றன. இடப்புறம் ஒன்று, வலப்புறம் ஒன்று, இரண்டுக்கும் நடுவில் ஒன்று ஆக மூன்று இருக்கின்றன. இடப் புறம் இருப்பதை இடைகலை என்றும், வலப்புறம் இருப்பதைப் பிங்கலை என்றும், நடுவில் இருப்பதைச் சுஷாம்னா அல்லது சுழுமுனை என்றும் சொல்வார்கள். இடைகலையில் ஒடும்போது சுவாசம் இடப்பக்கம் ஒடும். பிங்கலையில் ஒடும்போது வலப் பக்கத்தில் ஒடும். சுழுமுனையில் சுவாசம் ஒடும்போது இரண்டு பக்கத்திற்கும் சமமாக ஒடும். இரண்டு பக்கத்திலும் சமமாக ஒடும்போதுதான் நம் மனத்தில் தெளிவு உண்டாகும். சுழுமுனை யில் மூச்சு ஓடவேண்டுமானால், நாம் நினைத்தவுடன் செய்ய 72