பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய வழி உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொண்டு திண்டாடுகிறவர்கள் பலர். யோகம் கைவரப்பெற்றவர்கள் என்று சொல்கிறவர்கள் ஒருவர் இருவர் இருக்கலாம். அவரையும் எளிதில் காண முடியாது. ரமண மகரிஷியைப் போன்றவர்கள் யோகிகளாகத் தங்களுடைய வாழ்க்கையை நடத்தவில்லை. ஆனாலும் அவர்கள் அடையவேண்டியவற்றை அடைந்தவர்கள். விவேகானந்த சுவாமிகள் ராஜயோகம் பற்றிச் சொல்கிறார். ஹடயோகம் அருணகிரிநாத சுவாமிகளைப் போன்றவர்கள் கண்டிப்பது ஹடயோகத்தை. இந்தக் காலத்திலும் யாரேனும் ஒருவன் ஒரு காரியத்தைப் பிடிவாதமாகச் செய்தால் அவனை ஹடம் பிடிக் கிறான் என்று சொல்வது வழக்கம். ஹடயோகத்தைச் சாதிப்பது மிகவும் அரிய காரியம். யோக நெறியின் அங்கமாகிய ஆசனம் செய்கின்ற எல்லோருமே இறைவனிடம் பக்தியோடு இருப்ப கள் என்று சொல்ல முடியாது. உதாரணமாக நம்முடைய பிரத. ராகிய ஜவஹர்லால் நேரு தினந்தோறும் சிரசாசனம் செய்து வருகிறார். அதை ஒரு தேகப் பயிற்சியாகவே எண்ணி அவர் செய்கிறாரேயொழிய, இறைவன் திருவருளைப் பெறுகிற வழி என்று அதைச் செய்கிறது இல்லை. ஆகையால் யோக நெறியில் செல்கிற எல்லோருமே ஆத்ம இன்பத்தைப் பெறுவார்கள் என்று சொல்ல இயலாது. இப்படி உடம்பைப் பலவகையில் சிரமப் படுத்தி மூச்சை அடக்கி ஒடுக்கிக் கோடியில் ஒருவர் இருவர் முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெறுகிறார்கள். 'அத்தகைய கடுமையான செயல் எதற்காக எளிதாக இறைவன் திருவருளைப் பெறலாமே" என்று அருணகிரியார் சொல்கிறார். யோகிகளைப் பார்த்து இப்படிப் பேசுகிற பாட்டை முன்பும் பார்த்திருக்கிறோம். குழந்தையும் தாயும் தாய் மாடியில் நிற்கிறாள். குழந்தை கீழே நிற்கிறது. தாயிடம் செல்ல வேண்டும் என்று எண்ணிச் சின்னக் குழந்தை ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல ஏறிச் செல்கிறது. அப்படி ஏறுவதற்குக் காலில் திண்மை வேண்டும்; மனத் திண்மையும் வேண்டும். அந்தக் குழந்தை தன் காலைத் தவறி அவசரப்பட்டுக் 75