பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் முன்பு பலமுறை அருணகிரியார் யமனை நேரே பார்த்து, "உன்னுடைய கைவரிசை என்னிடம் பலிக்காது" என்று கூறினதைப் பார்த்திருக்கிறோம். 'யமனுக்கு நான் அஞ்ச மாட்டேன்' என்று படர்க்கையாகவும் பல பாடல்களைச் சொல்லி யிருக்கிறார். அப்படிப் பல வகையில் சொன்னவரைப் பார்த்து நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. "இப்படிச் சொல்லுகிறீர்களே, எவ்வளவோ ஆயுதங்களை வைத்துக்கொண்டு யமன் மக்களுடைய உயி ைக் கொள்ள வருபவன் ஆயிற்றே. சாமானிய ஆயுதம் வைத்துங் கொண்டிருப்பவனிடம் போரிடுவதே கடுமையாக இருக்கிறது. சூலம், வாள், பாசம், தண்டு ஆகிய பலவிதமான படைக்கலங் களை வைத்துக்கொண்டிருக்கிறவனை நான் வென்றுவிடுவேன் என்று நீங்கள் மார்தட்டிக் கொண்டிருக்கிறீர்களே. உங்களிடத்தில் என்ன சக்தி இருக்கிறது? உங்களிடம் என்ன படை இருக்கிறது? அவனைப் பகைத்துக் கொள்ளலாமா? அவன் வந்தால் அவனை எதிர்க்க அவன் படைக்கு ஒப்பாக என்ன பலத்தை வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறீர்கள்?' என்று நாம் கேட்கிறோம். அதற்கு விடையாக, "எனக்குத் தைரியம் இல்லாமலா சொல்வேன்? எனக்குத் தக்க பாதுகாப்பு இருக்கிறது” என்று சொல்வாரைப் போல இந்தப் பாட்டைச் சொல்கிறார். 'யமனிடத்தில் மட்டுந் தான் ஆயுதம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் களா? யமன் ஆயுதம் என்பால் வந்தால் எனக்குத் தீங்கு ஒன்றும் வராமல் காத்துக் கொள்வதற்குரிய ஆயுதம் என்னிடம் இருக் கிறது" என்று சொல்கிறார். அப்படிச் சொல்லும் பாடலில் பல ஆயுதங்களை நினைப்பூட்டுகிறார். ஆயுத மயம் இப்பொழுது உலகம் முழுவதும் ஆயுதமயமாக இருக்கிறது. பழங்காலத்தில் வாயவாஸ்திரம், ஆக்னேயாஸ்திரம், நாகாஸ் க.சொ.V1-6