பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 திரம் முதலிய பல ஆயுதங்களை வைத்துக் கொண்டு போரிட்டார் கள். மந்திரத்தைக் கூறி அவற்றை ஏவினார்கள். தம் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளவும் பிற நாடுகளைப் பிடிக்கவும் போர் செய்யும் இந்தக் காலத்திலும் பலவிதமான புதுப்புது ஆயுதங் களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார் கள். கத்தி முதல் அணுகுண்டு வரைக்கும் உள்ளன யாவும் ஆயுதங்களே. ஆயுத யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வது பொருந்தும். இப்போது கண்டுபிடித்துள்ள படைகளில் அழிவுச் சக்தி மிகப் பெரிது. போர் வந்தால் இனி உலகத்தில் யாருமே இல்லாமல் அழிந்துபோகக் கூடிய நிலைமை உண்டாகிவிடும் என்று தோன்றுகிறது. அதனால் உலகப் பேரறி ஞர்கள் இத்தகைய படைகளை உண்டாக்கக் கூடாது என்று அடிக்கடி வற்புறுத்தி வருகிறார்கள்; மகாநாடு கூட்டுகிறார்கள். அஸ்திரமும் சஸ்திரமும் அந்தக் காலத்தில் ஆயுதங்களை இரண்டு வகையாகப் பிரித்திருந்தார்கள்; அஸ்திரம், சஸ்திரம் என்பன அவை. தன் கையிலேயே பிடியை விடாமல் வைத்துக் கொண்டு போரிடும் கருவி சஸ்திரம். கையில் இருப்பதை எதிரிகளின்மேல் iசி எறிந்து போரிடும் கருவி அஸ்திரம். மனிதன் அறிவுடையவன் ஆகையால் புல்லையும் தனக்கு ஆயுதமாக உபயோகித்துக் கொள்ள முயல்கிறான். குதிரை, யானை முதலிய விலங்கு களையும் தனக்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆட்சி புரிந்த மன்னர்கள் மக்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் எதிரிகளைப் பூண்டோடு ஒழிப்பது எப்படி, அவர்களுடைய நாட்டைக் கைக்கொள்வது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அதற்காகப் பல பல படைக்கலங் களை உண்டாக்கியும், படைகளைக் கூட்டிக் கொண்டும் வாழ்ந் தார்கள். இன்றைக்கும் ஒவ்வொரு நாடும் படைகளைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிடம் அணுகுண்டு இருக்கிறது. ரஷ்யாவிடம் ஏவுகணை இருக்கிறது. அந்த அந்த நாட்டு அரசிய லார் தம்மிடம் வேறு யாரிடமும் இல்லாத ஆயுதம் இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதைக் கண்டு உலகம் அஞ்சுகிறது. படைகளை ஏவிச் செய்யும் நேர் யுத்தத்தைவிட 86