88 கந்தவேள் கதையமுதம் விட்டார்கள். இமாசலத்தில் கூட்டம் மிகுதியாகிவிட்டது. அந்தப் பாரம் தாங்க முடியாமல் இமாசலம் அமிழ்ந்தது. வடக்கே தாழ்ந்த வுடன் தென்பால் உயர்ந்தது. தேவர்களுக்கு அதைக் கண்டு பயம் வந்துவிட்டது. 'தென்னகத்தில் உள்ளவர்கள் எளிதில் ஒரு தாவுத் தாவிச் சொர்க்கத்திற்கு வந்துவிடுவார்களோ ?' என்று தேவர்கள் கவலைப்பட்டார்களாம். தக்கயாகப் பரணி என்னும் நூலில் உரை யாசிரியர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். 'தவம் செய்யாமல், தானம் செய்யாமல் தென்னாட்டிலுள்ள தமிழர்கள் தேவலோகத் திற்கு வந்துவிடுவார்களே !' என்று தேவர்கள் அஞ்சினார்களாம். எல்லோரும் அஞ்சிச் சிவனே சிவனே என்றார்கள். இன்னோர் எவரும் சிவனேஎன் றிரங்க லோடும் முன்னோனும் அன்ன செயல்கண்டு முறுவல் எய்தி அன்னோர் குறைநீத்திட நந்தியை நோக்கி ஆழி தன்ஓர் கரத்தில் செறித்தானைத் தருதி என்றான். (திருக்கல்யாணப்.49.) (முன்னோன் - சிவபிரான். ஆழி - கடலை. செறித்தாளை - அடக்கிய அகத்திய முனிவனை. தருதி - அழைத்து வா.) அகத்தியர் தென்திசைக்கு ஏசுல் இறைவனிடம் தங்கள் கவலையைத் தேவர்கள் சொன்னார்கள். சிவபெருமான் தெற்கே ஓர் இமாசலத்தை உண்டாக்கி நிலத்தைச் சீர்படுத்துவான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வண்டி ஒரு பக்கம் ஓரையடித்தால் மற்றொரு பக்கத்தில் ஒரு பாறாங்கல்லைப் போடச் செய்வதுபோல இறைவன் சமன் செய்வான் என்று எண்ணினார்கள். ஆனால் இறைவன் செய்தது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. தன்னுடைய கரத்தில் கடலை அடக்கிக் குடித்த அகத்தியனைக் கூப்பிடு என்றான். அகத்தியர் கட்டை விரல் அளவுதான் இருப்பார் என்று சொல்வார்கள். 17 சிவபெருமான் அகத்தியரைப் பார்த்து, 'நீ போய்த் தென் னுாட்டில் பொதிய மலையில் இருப்பாயாக" என்றான். அகத்தியர் அதைக் கேட்டு, "எம்பெருமானே, தங்களுடைய திருமண முகூர்த் தத்திற்காக எல்லா இடங்களிலிருந்தும் பலர் இங்கே வந்திருக் கிறார்கள். நான் எப்போதும் இங்கே திருவடித் தொண்டு செய்து
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை