90 கந்தவேள் கதையமுதம் வேறும்? நாம் எப்போது இறைவனிடம் போவோம்?" என்று ஆசை யோடு இருந்தவர் அல்லவா? போனாரா? $ அவர் போகவில்லை. காரணம் என்ன? அங்கேயும் சிவபெரு மான் இருக்கிறார். இங்கேயும் இருக்கிறார். அங்கே வாழ முடி யாது; பனிக்கட்டி நிரம்பி இருக்கிறது. இங்கேயோ நல்ல தமிழ் இருக்கிறது. நல்ல அருவி இருக்கிறது. சந்தனமும், தென்றலும் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சிவபெருமானை இங்கே தரிசிக்கலாம். இப்படி எல்லா விதமான நன்மைகளும் இருக்கும் இடத்தை விட்டு எதற்காக அங்கே போகவேண்டும்?" என்று எண்ணி அவர் அங்கேயே தங்கிவிட்டார். இந்தச் செய்தியைப் பழைய திருவிளையாடல் புராணத்தில் பெரும் பற்றப் புலியூர் நம்பி பாடுகிறார். ஆவியந் தென்றல் வெற்பின் அகத்தியன் விரும்பும் தென்பால் நாவலந் தீவம் போற்றி 32 [ஆவியந் தென்றல் வெற்பு - வாவிகளையும் தென்றலையும் உடைய பொதிகைமலை.] என்று சொல்கிறார். தென்பால் நாவலந் தீவு என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். அதைத்தான் இப்போது தென்னிந்தியா என்று சொல்கிறோம். அகத்தியர் செயல் அகத்தியர் இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்தார். அப்போது மற்றோர் எண்ணம் வந்தது. சில காலம் தங்கி விட்டுப் போவதற்கு அவர் ஓரளவு தமிழ் கற்று வந்தார். இப்போதோ இங்கேயே நிலைத்துவிடலாம் என்று எண்ணினார். இங்கேயே தங்கிவிட வேண்டுமென்றால் தமிழறிவு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று யோசனை செய்தார். மீண்டும் சிவபெருமானைக் கேட்பதா? உயர்நிலைப் பள்ளியில் பயிற்று வித்த தலைமையாசிரியரைப்போலச் சிவபெருமான் இருந்தார். அவரை விடப் பெரிய ஆசிரியர் யாராவது இருக்கிறாரா என்று எண்ணிப் பார்த்தார் அகத்தியர். அந்தச் சிவபெருமானுக்கே உபதேசம் பண்ணிளவன் குமர குருபரன். ஆகவே மேல்படிப்பை
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை