94 கந்தவேள் கதையமுதம் தவழ ஆரம்பித்தார், அவர் எப்போதும் கட்டை முதலிய உடை களைத் திருத்தமாக அணிந்து கொள்பவர். அத்தகையவர் அவற் றைக் கழற்றிவிட்டு, நாலு காலால் நடக்கும் யானையைப் போல நடந்தார் என்றால் அது அவருக்கு இழுக்கா? தம் குழந்தையிடம் அவர் கொண்டுள்ள சிறந்த வாத்சல்யத்தை அல்லவா அந்தச் செயல் காட்டுகிறது? அது போல் சிவபெருமான் அருள் நிரம்பி, ஆருயிர் களைக் காப்பாற்றுவதற்கு எத்தனையோ வகையில் தாழ்ந்து தாழ்ந்து வருகிறான். அப்படி அவன் மிகவும் இறங்கி வந்த செயலே இது. அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார்? என்று கச்சியப்பர் அதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். மன்மதன் உயிர் பெறல் மேலே, திருமணத்திற்குரிய சடங்குகளைப் பெருமான் செய்தான். தன்னுடைய கணவனாகிய மன்மதனை இழந்த இரதி அங்கே போய், "எம்பெருமானே ! என் கணவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும் என்று வேண்டினாள். ஆண்டவன் திருவுள்ளத்தில் நினைக்க மன்மதன் வந்தான். "இரதியின் பொருட்டாக உனக்கு உயிர் தந்தேன். நீ பண்ணியது தவறான காரியம். அதற்குரிய தண்டனையை உனக்குக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆகவே இரதியின் கண்ணுக்கு மட்டும் நீ தோற்றுவாய். மற்றவர்கள் கண்ணுக்குத் தோன்றாமல் அநங்கனாக நீ உன் ஆட்சியை நடத்து" என்றான். எரியுனை நமது நோக்கால் இறந்தநின் உடலம் நீறாய் விரைவொடு போயிற் றன்றே ; வேண்டினள் இரதி; அவ் குருவமாய் இருத்தி ; ஏனை உ ம்பரோ டிம்பர்க் கெல்லாம் அருவினை யாகி உன்றன் அரசியல் புரிதி என்றான். னாட் (திருக்கல்யாணப். 89.) உம்ப [எரி புளை நோக்கால் - தீயாகிய கண்ணினால். இருத்தி - இருப்பாய். ரோடு இம்பர்க்கு - தேவலோகத்திலுள்ளவர்க்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்க்கும், அருவினையாகி - உருவம் அற்றவனாகி. புரிதி - செய் ] இரதி தேவிக்கு இவ்வாறு அருள் புரிந்ததுபோல அங்குள்ள தேவர்களுக்கும் அவரவர்களுக்கேற்றபடி ஆண்டவன் அருள் செய்து
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை