98. கந்தவேள் கதையமுது முடியாவிட்டாலும் அதைப் பற்றிய வருணனையை விளங்கும்படி சொல்லலாம் அல்லவா? அப்படி உன்னை வாக்கினால் சொல்லலாம் என்றால் நீ வாக்குக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறாய். மனத்திற்கும் அப்பாற்பட்டவனுக விளங்குகிறாய். ஆகவே மனத்திலும் நினைக்க முடியவில்லை' என்று துதித்தார்கள். $3 13 "யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸான; என்று வேதம் சொல்கிறது. கண்ணுக்கும், வாக்குக்கும், மனத்திற்கும் அப்பாலாய் இருக்கிறான் இறைவன். அவன் அசைக்க முடியாத வனாக இருக்கிறான்; நிலையாக இருக்கிறான். அதனால் அவனுக்கு ஸ்தாணு என்று பெயர். இரும்புத் தூண் எப்படி இருக்குமோ அப்படி ஆடாமல், அசையாமல் இருக்கிறவன் ஆண்டவள். இந்திர பதவியில் இருப்பவனுக்கு ஒரு காலவரையறை உண்டு. அந்தக் காலம் வரையில் அவன் வாழ்வான். அவன் போன பிறகு வேறு இந்திரன் வருவான். இப்படியே வெவ்வேறு பதவியிலுள்ள தேவர்கள் அவரவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் போய்விடுவார்கள். ஆனால் பரமசிவனே எல்லாக் காலத்திலும் இருப்பான். யாராலும் அவனை நீக்க முடியாது. சில பதவிகளுக்கு மூன்று வருஷம், ஐந்து வருஷம் என்று வரையறை உண்டு. இந்திர பதவி முதலியவைகளுக்கும் அப்படி வரையறை உண்டு. பரமசிவ பதவி அத்தகையதன்று. நீக்கரும் நிலைமையின் நிற்றி; எந்தைநீ ஆக்கிய மாயமீ தறிகி லேமரோ என்கிறார்கள் தேவர்கள். உன்னை மாற்றவே முடியாது. எல்லாவற்றையும் மாற்றுவாய். ஆனால் நீ மாற்றப்படுவதில்லை. உன்னை மாற்றுவார் யாரும் இல்லை. இதெல்லாம் பெரிய மாய் மாய் இருக்கிறது " என்று புகழ்ந்தார்கள். மற்றொரு பாடல் வருகிறது. 'அது மிகச் சிறந்த கருத்துக்களைச் சொல்வது. உருவொடு தொழில்பெயர் ஒன்றும் இன்றியே பரவிய நீஅவை பரித்து திற்பது, விரவிய உயிர்க்கெலாம் வீடு தந்திடும் தருணைய தேஅலால் கருமம் யாலுதே ?" [யரித்து - தாங்கி ] (திருவவதாரம்.84 )
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை