100 கந்தவேன் கதையமுதம் ஊர் நான் போவேன். எனக்கென்று ஒன்று இல்லாமையினால் பல களிலும் உள்ள நண்பர்கள் தம் கார்களைக் கொடுக்கிறார்கள். பல கார்களில் போகிறேன் என்று சொல்வேன். அதேபோல் ஆண்டவன் எத்தனையோ வகையான உருவத்துடனும், பல பல பெயர்களுடனும் வருகிறான். இறைவன் திருவருளைப் பெறவேண்டும் என்பதற்காகப் பல வகையான ஆராய்ச்சிகளைச் செய்து வழிபட்டிருக்கிறார்கள் நம் நாட்டுப் பெரியவர்கள். ஆண்டவனை நாம் மனத்தில் தியானம் பண்ண வேண்டும். தியானம் பண்ணுவதற்கு வடிவம் இருந்தா லன்றி முடியாது. மனித மனத்தின் இயல்பு இது. நாம் எதை யாவது நினைப்போமானால் அதற்கு வடிவம் இருந்தால்தான் மனத் தில் பதியும், இது இந்து சமயத்திற்கு மாத்திரம் உள்ள தத்துவம் அன்று. மனித இயல்பு இது. மனித உள்ளம் வடிவம் இல்லாத ஒன்றைப் பற்றது. தண்ணீரை HO என்கிறார்கள். ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால் தண்ணீர் ஆகும். இந்த வாயு மேலே எங்கேயும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிவதில்லை. இரண்டு வாயுவும் சேருகின்றன. அப்போது வெண் மேகம் உண் டாகிறது. குளிர்ந்த காற்றுப் பட்டவுடன் அது கறுப்பு மேகம் ஆகிறது. பின்பும் குளிர்ந்த காற்றுப் பட்டால் கனத்த மேகம் ஆகிறது. அந்தக் கனமான மேகம் மலைமேல் தங்குகிறது. மறுபடி யும் குளிர்ந்த காற்றுப் பட்டால் மழையாகப் பெய்கிறது. அந்த நீர் அருவியாக வந்து, ஆறாகப் பாய்ந்து, கால்வாய் வழியே வந்து, தேக்கத்தில் நின்று, அங்கிருந்து குழாய் வழியே நம் வீடுமட்டும் வந்துவிடுகிறது. அந்தத் தண்ணீரைக் குழாய்த் தண்ணீர் என்று சொல்கிறோம். ஆனால் அது மேகத்திலிருந்து வந்த தண்ணீர்தான். குழாய் என்னும் கருவி வழியாக வந்ததனால் குழாய்த் தண்ணீர் என்று சொல்கிறோம். எங்கள் வீட்டுக் குழாயில் மேகத்திலிருந்து தண்ணீர் வருகிறது' என்று சொன்னால் விவரம் தெரியாதவர்கள் மயங்குவார்கள். உண்மை தெரிந்தவன் ஆம் என்பான். 1 இறைவனுடைய வடிவத்தைக் காணும்போது மூலப்பொரு ளான பரமேசுவரனை நினைக்க வேண்டும். அவனே இப்படி வடிவு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை