பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் 105 டையும் மாட்டார் என்று சொல்கிறேன். மாட்டார் உள்ளே புகுந் தால் தளதள என்று வளர்ந்திருக்கும் கீரையைப் பார்த்துச் சும்மா இருக்கமாட்டார். வேரையும், வேரடி மண்ணையும் நாவினால் பறித்து உள்ளே தள்ளுவார். மனிதன் உண்பது எப்படி? கீரையை எடுத்து வந்து, வேரை வெட்டி வெளியில் போட்டு, தண்டைத் தனியாகவும், இலையைத் தனியாகவும் எடுத்து, தண்டைக் குழம்பில் போட்டு, கீரையை மசியல் ஆக்குவான். பிற்பகலில் உண்பதற்குக் கீரையை எடுத்து வைத்து, கீரை வடை பண்ணி உண்பான். இப்படி மாடு அநுபவிக்கும் முறைக்கும், மனிதன் அனுபவிக்கும் முறைக்கும் வேறு பாடு இருக்கிறது. ஏன்? மாடு பசிக்கு மாத்திரம் உண்கிறது. மனிதன் ருசிக்கும் உண்கிறான். பல விதமான ருசி அவனுக்குத் தேவைப்படுகிறது. Variety is the spice of life* என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அனுபவிக்கும் பொருள் பல வகையாக இருந்தால் மனிதனுக்குக் கவர்ச்சி அதிகமாகிறது. ஆண்!டவன் அநுபவிக்கும் பொருளாக வரும்போது பல வகையாக இருந்தால் ஈடுபாடு அதிகமாகும் அல்லவா? எல்லோருக்கும் ஒரே மாதிரி தியான மூர்த்தி வாய்த்தால் எல்லோரும் ஒரு சீராக ஈடுபாடு கொள்ளமாட்டார்கள். சிலருக்கு இறைவனைக் குழந்தையாக வைத்துத் தியானிப்பதில் விருப்பம் இருக்கும். சிலருக்கு இறைவனைப் பெரியவராக வைத்துத் தியானம் பண்ணவேண்டுமென்று தோன்றும். மனத்திற்கு மனம் வேறுபடு கிறது. அந்த அந்த மனத்திற்கேற்ப ஏதேனும் ஒரு வடிவத்தைப் பற்றிக்கொள்ளட்டும் என்று பல்வேறு வடிவங்களை இறைவன் எடுத்துக் கொள்கிறான். ஹிந்து மதத்தில் இப்படிப் பலவகையான உபாசனா வடிவங்கள் இருப்பதனால் அதற்கு இழுக்கு வந்துவிடாது. பெருமைதான் அதிகம். ஓரிடத்தில் அரிசி மாத்திரம் விற்கிறான். மற்றோரிடத்தில் தேங்காய் மாத்திரம் விற்கிறான். பருப்பு விற்கும் கடை ஒன்று. புடலங்காய் விற்கும் கடை ஒன்று. இப்படி ஒவ்வொரு பண்டத்தை யும் வாங்க ஒவ்வொரு கடைக்குப் போகவேண்டும். சாமான்களும் ஒரே கடையில் கிடைத்தால் அது பெரிய கடை 14 எல்லாச்