114 கந்தவேள் கதையமுதம் ஓர் ஆற்றில் ஐந்து அணைகளும், ஒவ்வொன்றுக்கு இரண் டாகப் பத்துக் கால்வாய்களும் இருக்கின்றன. பயிர்கள் தழைக் கின்றன. ஆனால் இன்னும் சில மேட்டு நிலங்களில் தண்ணீர் பாயவில்லை. புதியதாக மற்றொர் ஆற்றையோ, தண்ணீரையோ உண்டாக்க வேண்டியதில்லை. பாசனம் இன்னும் அதிகமாக வேண்டும். அதற்கு மற்றோர் அணை கட்டி, பின்னும் இரண்டு கால்வாய்களை வெட்டுகிறார்கள். இப்போது ஆறு அணைகளும், பன்னிரண்டு கால்வாய்களுமாக இருக்கின்றன. முன்பே பாய்ந்த நீர் இப்போது மிகுதியாகப் பாய்கிறது. பயிர்கள் மேலும் தழைக் கின்றன. இதைப்போல அஞ்சு முகமும், பத்துக் கரங்களும் உடைய சிவபெருமானே ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் உடைய வனாக எழுந்தருளும்போது அருள் பாசனம் மிகுதியாகிறது. உயிர்கள் எல்லாம் உய்கிறார்கள். கருணைகூர் முகங்களாலும் கரங்கள்பன்விரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய என்று இந்தக் கருத்தைச் சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். சிவபெருமானை உபாசனை செய்வதைவிட ஆறுமுகனாக உபாசனை செய்யும்போது உள்ளே நன்றாகப் பதிகிறது. அதனால் அருளை விரைவில் பெறுகிறோம் பகவான் என்ற சொல்லுக்குப் பகத்தை உடையவன் என்று பொருள். பகம் என்பது ஆறைக் குறிக்கும். ஆறு குணங்கள் நிரம்பியவன் என்று பொருள். ஞானம், ஐசுவர்யம், சக்தி,பலம், வீர்யம், தேஜஸ் என்பவை அந்த ஆறு. இந்த ஆறு குணங்களையும் ஆறு முகங்களாகக் கொண்டு வந்தான். ஏவர்தம் பாலும் இன்றி எல்லைதீர் அமலற் குள்ள மூவிரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப் பூவியல் சரவணத்தண் பொய்கையில் வைகும் ஐயன் ஆவிகட் கருளு மாற்றால் அறுமுகம் கொண்டா னன்றே. (திருவவதாரம். 94.) [எல்லை தீர் - அளவுக்கு அப்பால் உள்ள: கால எல்லை, இட எல்லை அற்ற சேய்க்கு - முருகனுக்கு.] .
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை