பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.16 கந்தவேள் கதையமுதம் முழந்தான். திருநெல்வேலியைக் காட்டும் கைகாட்டியினால் வழியை உணர்ந்து காரில் காரில் போகிறவன் போகிறவன் அந்தச் சாலையின் வழியே போவான். அந்தக் கைகாட்டியே திருநெல்வேலி வரைக்கும் வராது. அது போல் வேதம் இறைவனை அடைவதற்கு உரிய வழியைக் காட்டுமேயொழிய அதுவே இறைவன் வரைக்கும் வராது. அதனால் வேத நெறி, வேத மார்க்கம் என்று சொல்லுவது வழக்கம். தான். சரவணம் என்னும் தொட்டிலில் முருகப் பெருமான் வீற்றிருந் முடிபொரு தசையும் நாகர் முதியகால்; பலகை வையும்; தொடர்கரை மரனே வானம் தூங்குபன் னாணம்; தெண்ணீர்த் தடமலர் யாய லாகச் சரவண மஞ்ச மீதில் அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா என்றே. (திருஅவதாரம்.98.) நாகர்-ஆதிசேஷன். தூங்கு - தொங்கும். நாணம் - சங்கிலி, படுக்கை. மஞ்சம் - தொட்டில். மென்கால்- தென்றற் காற்று.] பாயல்- ஆதிசேஷன் அந்த மஞ்சத்தின் கால். இந்தப் பூமியே அதன் பலகை. கரையிலுள்ள மரங்களே கயிறு. தாமரைப் பூவே படுக்கை. இப்படிச் சரவணம் என்னும் மஞ்சத்தில் முருகப் பெரு மான், காற்று வீசி அதை அசைக்க வீற்றிருந்தானாம். "சரவணப்பூம் பள்ளியறை" என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்வார். " 'திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை விரும்பிக் கடல் அழக் குன்றழச் சூரழ விம்மி அழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என் றோதும் குவலயமே" என்று அருணகிரிநாதர் பாடுகிறார். குழந்தை வெளியில் வந்தவுடன் முதலில் அழுகிறது. அது நம் நாட்டுக் குழைந்தைக்கு மட்டுமல்ல; எல்லா நாட்டுக் குழந்தைக்கும் அதுதான் முதல் பேச்சு. அழவில்லை யென்றால் குழந்தை ஆரோக்கிய மாக இல்லையென்று பொருள். அழ அழக் குழந்தையின் நுரை