பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் 117 என்று அழுகை யீரல் விரியும். அதனால் வயசானவர்கள் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், "குழந்தை அழுதுகொண் டிருக்கிறதா ?" கேட்பார்கள். எம்பெருமானும் அழுதானாம். அந்த எங்கெங்கோ கேட்டு எதிரொலித்ததாம். கடலின் நடுவிலும், கிரௌஞ்ச கிரியிலும், சூரனுடைய காதிலும் சென்று விழுந்ததாம். அவர்கள் கேட்டு அழுதார்களாம், நமக்கு முடிவு காலம் வந்து விட்டதே என்று. இப்படி இருந்த எம்பெருமான் ஆறு குழந்தைகளாக மாறி விளையாடல் புரிந்தான். கிருத்திகை மாதர் ஆறு பேர். ஏழு முனிவர்களில் வசிஷ்டருடைய மனைவி அருந்ததி எப்போதும் அவர் பக்கத்திலேயே இருப்பாள். சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்டர் பக்கத்தில் அருந்ததியைப் பார்க்கலாம். மற்ற முனிவர் களின் பத்தினிமார்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக விளங்குகிறார்கள். அவர்கள் தவம் செய்து முருகப் பெருமானை வளர்க்க வேண்டுமென்று வேண்டினார்கள். அவர்கள் விருப்பப் படியே ஆண்டவன் அவர்களுக்கு அந்த வரத்தைக் கொடுத் தருளினான். மறுவரும் ஆரல் ஆகும் மாதர்மூ விருவர் தாமும் நிறைதரு சரவணத்தில் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுவோன் ஆத லாலே அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவம் கொண்டான். (திரு அவதாரம்.116.) (ஆரல் -கார்த்திகை. உறுநர்கள் - தன்பால் வந்து அடைந்தவர்கள்.] இந்த ஆறு பொறிகளால் உண்டான ஆறு திருக் குமாரர்களும் கார்த்திகை மாதர்களின் பாலை உண்டு வளர்ந்தனர். தம்பால் அடைந்தவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் தரக் கூடியவன் ஆண்டவன். கார்த்திகை மாதர்களின் விண்ணப் பத்தை ஏற்று ஆறு வேறு குழந்தைகளாக அவர்களிடம் பாலை நுகர்ந்து அவர்களுக்கு இன்பத்தை நல்கினான். அவர்களுடைய பாலை நுகர்ந்ததால் முருகப் பெருமான் அடைந்த இன்பத்தைவிடக் கார்த்திகை மாதர்களுக்கு உண்டான இன்பம் அதிகம். இறைவன் செய்கிற காரியங்கள் எல்லாம் தன்னைச் சார்ந்த பக்தர்கள் நலம்