வீரர்களின் தோற்றம் கைலாசத்தில் வீற்றிருந்த உமாதேவி அஞ்சி அந்தப்புரத் திற்கு ஓடியவள் முருகப் பெருமான் தோற்றத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். முப்பத்து முக்கோடி தேவர்களின் முறை யீட்டினாலே ஆண்டவன் அந்த ஆறு பொறிகளையும் அடக்கித் திரும்பப் பெற்றனன் என்பதை அறிந்து மீண்டும் எம்பெருமானிடத் தில் வந்தாள். நஞ்ச யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும் வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை, செஞ்சி லம்படி தாக்கலின் நவமணி சிதற அஞ்சி ஓடினள்; இத்திறம் உணர்ந்தளள் அகத்துள். துணைவர் வரு, 1.) (நஞ்சயின்ற நீலகண்டத்து எம்மாள் நெற்றி நாட்டத்துப் பொறிகள் நாங்கும் சிதற, அதனைக் கண்டு அஞ்சிச் சிலம்பின் பரல்கள் சிதற, அந்தப்புரத்திற்கு ஓடிய வள் பின்னால் நிகழ்ந்ததை அறிந்து கொண்டாள்.) மாயவன் முதல் இந்திராதி தேவர்கள் எல்லாம் எம்பெருமா னிடத்தில் வந்து, குழந்தையை அருள வேண்டுமென்று கேட்க, நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் எழுந்து சரவணப் பூந் தடாகத்தில் ஆறு குழந்தைகளாக வீற்றிருந்தார்கள். ஆண்ட வன் அருளால் ஆறு பொறிகளும் அவ்வாறு இருப்பதை அம்பிகை தெரிந்துகொண்டாள். அம்பிகை தந்த சாபம் தாயும் தந்தையும் சேர்ந்துதான் குழந்தை பிறக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தியிடம் சார்ந்து குழந்தை பிறந்தால் மற்றொருத்திக்குப் பொறாமை உண்டாகும். தனக்கு எம்பெருமான் மூலம் குழந்தை பிறக்காமல்,இவ்வாறு நெற்றி நாட்டத்திலிருந்து குழந்தை பிறந்ததற்குக் காரணம் தேவர்களின் அவசரக்கோலமே என்று உணர்ந்தாள் எம்பெருமாட்டி. அப்போது, "தேவர்களின் மனைவிகளுக்கு எல்லாம் குழந்தை இல்லாது போகட்டும்" என்று சாபமிட்டாள்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை