xii கந்தவேள் கதையமுதம் 2. லாம். கம்பராமாயணத்தில் வரும் பல வகைக் கதையமைப்பைக் கந்தபுராணத்திலும் காணலாம். அமரர் சேதுப் பிள்ளையவர்கள், "வேலும் வில்லும்" என்ற நூலில் இதை நன்கு விளக்கி யிருக்கிறார். கம்பர் கந்தபுராணத்தைப் பாட எண்ணினாரென்றும், பிறகு திருவருள் கூட்டுவிக்க இராமாயணத்தைப் பாடினார் என்றும் ஒரு செய்தி வழங்குகிறது. கம்பர் பாட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு இந்தப் புராணத்தின் விரிவு அமைந்திருக்கிறது என்பது அந்தச் செய்தியால் புலப்படும். கந்தபுராணத்தை முதலில் அச்சிட்டவர் யாழ்ப்பாணத்துநல்லூர் ஆறுமுக நாவலரவர்கள். சில காண்டங்களுக்குச் சுப்பிரமணிய சாஸ்திரியார் என்ற யாழ்ப்பாணப் புலவர் உரை எழுதி உள்ளார். தூத்துக்குடியில் உள்ள தேச பக்தரும், வள்ளலுமாகிய திரு ஏ.பி.சி.வீரபாகு அவர்கள் தம்முடைய மணிவிழாவை 2-5-1975 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். அதன் தொடர்பாக 30 நாட்கள் கந்தபுராண விரிவுரையை ஆற்றும்படி என்னைப் பணித் தார். முருகன் திருவருளை முன்னிட்டு 6-5-75 முதல் இருபது நாள் கந்தபுராணச் சொற்பொழிவுகளைச் செய்தேன். அவற்றை அன்றன்று பதிவு செய்தார்கள். அவற்றைப் பிறகு பிரதி செய்து தந்தனர். என்னுடைய அன்பர் திரு அனந்தனிடம் மீண்டும் ஒரு முறை அந்தப் பிரதியை வைத்துக்கொண்டு சொல்லிச் சுருக்கெழுத்தில் பதியச் செய்தேன். அவ்வாறே செய்து அந்த அன்பர் தட்டெழுத்தில் வடித்துக் கொடுத்தார். அதைச் செப்பஞ் செய்து இந்த நூலை வெளியிடலானேன். தக்க காண்டத்தில் சிவபெருமானுடைய திருவிளையாடல் களையும் பராக்கிரமங்களையும் காணலாம். அந்தப் பகுதிகளை விரிக்காமல் முருகன் வரலாற்றோடு தொடர்புடையவற்றைப் பற்றி மாத்திரம் விரிவுரை செய்தேன். அந்த விரிவுரையைப் புத்தக வடிவில் வெளியிட முருகன் திருவருள் கூட்டியது. திரு ஏ.பி.சி.வீரபாகு அவர்கள் இந்தப் புத்தகம் வெளியாக வேண்டும் என்று மிக்க ஆர்வம் காட்டினார். அவருடைய பேரன்பே
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை