122 கந்தவேள் சுதையமுதம் சூரியன், சந்திரன், அக்கினி என்பன மூன்று சுடர்கள். சூரிய மண்டலத்து இடையிலும், சந்திர மண்டலத்து இடையிலும், அக்கினியின் நடுவிலும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறான். எங்கெங்கே ஒளி உண்டோ அங்கெல்லாம் இறைவன் அம்சம் இருக்கும்.நாம் ஏற்றுகிற குத்து விளக்கிலும் ஆண்டவன் இருக் கிறான். வானத்தில் தோன்றுகிற இரண்டு சுடர்களிலும் அவன் எழுந்தருளியிருக்கிறான். இறைவனைப் பரஞ்சோதி என்று சொல் வார்கள். எல்லா வகையான ஒளிகளுக்கும் மூலமாகவும், மிகப் பெரிய சோதியாகவும் விளங்குபவன் அவன். அவன் சூரிய சந்திரர் களாகவும்,விளக்கில் ஒளியாகவும் எழுந்தருளியிருக்கிறான். பரஞ் சோதி என்ற நிலையில் மனத்திற்கும், வாக்கிற்கும் அப்பாலாய் அவன் இருக்கிறான். காலம், தேசம் ஆகிய இரண்டு எல்லைகளையும் கடந்தது அது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி" என்று மாணிக்கவாசகர் அந்த நிலையைச் சொல்கிறார். அது பெருஞ்சோதி, அருஞ்சோதியாகும். "பெருஞ்சோதியாக இருப் பதுவே அருஞ்சோதியாகவும் இருக்குமா ?" என்று ஒருவர் கேட்க லாம். பெருஞ்சோதியாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரிய வேண்டுமென்பது அவர் எண்ணம். மின்சார விளக்குகளுக்கு எல்லாம் மூலமாக இருக்கிற மின் சக்தி ஜெனரேடரில் உள்ள மின்சாரம் கண்ணுக்குத் தெரியாது. அதுபோல் எல்லாச் சோதி களுக்கும் மூலச் சோதியாக இருக்கிற பெருஞ்சோதி கண்ணுக்குத் தெரிவதில்லை. பரஞ்சோதிக்கும், சூரிய சந்திரச் சுடர்களுக்கும் வேறுபாடு உண்டு. பரஞ்சோதி பொறிபுலன்களுக்கு அப்பால் இருக்கிறது. சூரிய சந்திரர்கள் நம்மால் காண்பதற் குரியவை. அவற்றை நாம் கண்ணால் காண்கிறோம். பரஞ்சோதிக்கு எல்லை கிடையாது. சூரிய சந்திரர்களுக்குக் கால எல்லை உண்டு; இட எல்லை உண்டு. வானத்தில்தான் சூரிய சந்திரர் இருப்பார்களே தவிர வீட்டுக்குக் கொண்டுவர முடியாது. வானம் என்ற இட எல்லை உடையவை அவை. இரவிலே சூரியன் வருவதில்லை; பகலில்தான் இருக்கும். அது கால எல்லை. காலதேச பரிச்சின்னம் என்று இந்த இரண்டு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை