பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் எல்லைகளையும் சொல்வார்கள். 123 பரஞ்சோதிக்கு எந்த விதமான எல்லையும் இல்லை. சூரிய சந்திரராகிய சுடர்களுக்குக் கால எல்லை யும், இட எல்லையும் உண்டு. பரஞ்சோதியே சுடராக எழுந்தருளு கிறான். அவனே மறுபடியும் விளக்காக வருகிறான். விளக்கு எத்தகையது? அதுவும் சோதிதான்; ஆண்டவன் வடிவம். "தீப மங்கள ஜோதீ நமோ நம என்பர் ஆருணகிரிநாதர். நம் விளக்குக்கும், சுடருக்கும் வேறுபாடு உண்டு. சூரிய சந்திரர்களை நாம் கண்ணால் காண முடியும். ஆனால் இரண்டையும் நம் வீட்டிற் குள் கொண்டுவர முடியாது. நமக்கு வேண்டிய காலத்தில் நமக்கு வேண்டிய இடத்தில் அழைத்துப் பயன் கொடுக்கும்படி செய்ய முடியாது. விளக்கோ அப்படி அன்று. நம் விருப்பப்படி எந்த இடத்திலும் ஏற்றலாம்; எந்தக் காலத்திலும் ஏற்றலாம். முடைய வசதிக்கேற்றபடி இடம், காலம் என்னும் எல்லைகளுக்கு அகப்பட்டு வருவது விளக்கு. ஆனாலும் அந்த விளக்கிலுள்ள சுடர் நம்மாலே உண்டுபண்ணப்படுவதில்லை. திரியைத் திரிக்கலாம். எண்ணெய் ஊற்றலாம். விளக்கை உண்டு பண்ண முடியாது. ஆண்டவன் பரஞ்சோதியாகவும், சுடராகவும், விளக்காகவும் எழுந் தருளியிருக்கிறான். மாணிக்கவாசகர், 21 "சோதியே சுடரே சூழொளி விளக்கே ' என்று பாடுகிறார். சோதியாக இருப்பது சுடராக இறங்கி, பின்னும் விளக்காக இறங்கிவருகிற கருணைத் திறத்தைக் காட்டுவது அது. அருட்பிரகாச வள்ளலார் இதை வேறு ஒரு வகையில் சொல் கிறார். கீழே இருந்து மேலே போகிறார் அவர். 14 அருள்விளக்கே, அருட்சுடரே,அருட்சோதிச் சிவமே" என்று சொல்கிறார். இவ்வாறு சூரியனிலும், சந்திரனிலும், விளக்கிலும் சிவபெரு மான் எழுந்தருளியிருப்பதுபோல நவமணிகளுக்குள் எம்பெருமாட்டி யின் வடிவம் தோன்றின என்றார் சிவாசாரியார். ஏன் இந்த உ மானத்தைச் சொல்ல வேண்டும்? பரமசிவனும், பராசக்தியும் ஒரே மாதிரி இருப்பவர்கள். அவன் எப்படியெல்லாம் இருக்கிறானோ,