பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xiii இந்த வடிவில் இது வெளிவருவதற்குக் காரணம். முருகன் யாரை யேனும் கருவியாகக் கொண்டு நல்ல செயல்களை நடத்துகிறான். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த நூலை நான் வெளியிடுவது என்பது இயல்வதா? இருபது நாட்கள் தொடர்ச்சியாகக் கந்தபுராணச் சொற் பொழிவுகளை நிகழ்த்த வாய்த்ததை எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே கருதுகிறேன். முருகனை வழிபட்டுப் போற்றி அவன் திருநாமத்தைச் சொல்லி வாழும் எளியேனுக்கு அவனுடைய திவ்ய சரித்திரத்தில் ஆழ்ந்து இன்புறும் நலம் இந்த நிகழ்ச்சியால் கிடைத்தது. அருணகிரிநாதர் திருவாக்கில் ஈடுபட்டுக் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி ஆகியவற்றுக்கு விளக்கவுரை சொல்லவும், விளக்கக் கட்டுரைகள் அடங்கிய நூல்களை வெளி யிடவும் திருவருள் பாலித்த முருகன் இந்த அரிய புராணத்தையும் ஆழ்ந்து படிக்கவும், விளக்கவுரை ஆற்றவும் அருள் புரிந்தான். சில படித்ததில்லை. வடமொழியில் ஸ்காந்தத்தை நான் பகுதிகளை மட்டும் கேட்டிருக்கிறேன். தமிழில் உள்ள கந்த புராணமே தமிழர்களின் மனத்தைக் கவர்வது. வடமொழியில் இராமாயணம், பாகவதம், பாரதம் ஆகியவற்றைப் பற்றிய உபந் நியாசங்களைச் செய்யும் பௌராணிகர் பலர் உள்ளனர். . ஸ்காந்தத்தை உபந்நியசிப்பவர் மிகச் சிலரே. தமிழிலும் கந்தபுராண விரிவுரை செய்பவர் சிலரே. ஆனால் அப்படியே கந்தபுராணத்தைப் இந்த நூலைப் படிப்பவர்கள் ஒருவாறு பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். திரு வீரபாகு அவர்கள் கூடிய வரையில் கந்தபுராணச் செய்யுட்களை மிகுதியாகச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். வெறும் கதையைச் சொல்வதை விட ஆன்றோர் திருவாக்கை எடுத்தியம்பி விளக்குவது சிறந்தது என்பதே அவருடைய கருத்து. கிட்டத்தட்ட 550 பாடல்கள் இப் புத்தகத்தில் உள்ளன. இப் புத்தகத்தில் வரும் கந்தபுராணச் செய்யுட்களின் முதற் குறிப்பு அகராதியை இறுதியில் காணலாம்.