பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் 135 இருந்தவன் இப்போது திட்பமாகப் பலருக்கும் பயன்படும் பொரு து ளாக ஆகிவிட்டான். முன்னாலே வெறும் தங்கமாக இருந்தான்; இப்போது பணிப்பொன்னாக ஆகிவிட்டான். ஆபரணமாக உள்ள பொன்னுக்குப் பணிப்பொன் என்று பெயர். வெறும் தங்கத்தினால் பயன் இல்லை. அது ஆபரணமாக உரு எடுத்தால்தான் அணிந்து கொள்வார்கள். ஆகவே, உலகம் எல்லாம் முருகனால் பயன்பெற வேண்டுமானால் அவன் பராசக்தியின் சம்பந்தத்தை முழுமையாகப் பெற வேண்டும். இதுவரைக்கும் முருகன் செய்த திருவிளையாடல் கள் சக்தியின் தொடர்பு இல்லாத சாதாரணத் திருவிளையாடல்கள். இனிமேல் அம்பிகையின் திருவருளால் பெரிய பெரிய திருவிளை யாடல்களைப் பண்ணப் போகிறான். பார்வதியம்மை ஆறு குழந்தைகளையும் அணைத்து ஒன்றாக்கிய போது முருகன் ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையவனாக ஆனான். இந்தச் செய்தியை எண்ணித் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழில் ஓர் அற்புதமான கற்பனையை அமைத்திருக்கிறார். பிள்ளைத் தமிழ் நூல்களில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண் பால் பிள்ளைத் தமிழ் என்று இரு வகை உண்டு. குழந்தைப் பிராயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இல்லையென்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இயற்கையாகவே ஒரு வகையான வேறுபாடு அவர்களிடத்தில் தோற்றுகிறது. தந்தை கடையிலிருந்து பல பொம்மைகளை வாங்கிக் கொண்டுவந்து போடு கிறார். அதில் சைக்கிள் இருக்கிறது; அம்மிக் குழவி இருக்கிறது; செப்பு இருக்கிறது; பானை இருக்கிறது; துப்பாக்கி இருக்கிறது. ஆண் குழந்தை துப்பாக்கியையும், சைக்கிளையும் எடுத்துக் கொள் வான். பெண் குழந்தை அம்மியையும், செப்பையும் எடுத்துக் கொள்வாள். அப்போதே அவளுக்குத் தன்னை அறியாமலேயே தான் பெண் என்ற உணர்ச்சி உண்டாகிவிடுகிறது. சிறிய பெண்கள் வீதியில் மண்ணினால் சிறு வீடு கட்டுவார்கள். சிறிய இலையைப் போட்டு அதிலே மண்ணைச் சோறாக இட்டு, விருந்து போடுவார்கள். சிற்றில் அமைத்து, சிறு சோறு சமைத்து விளையாடுவது பெண்களுடைய வழக்கம். பெண் குழந்தைகள்