140 கந்தவேள் கதையமுதம் விழாவில் அவர்களும் கலந்துகொண்டு தேரை இழுக்கலாம். இங்கே வடம் பிடித்து இழுத்தால் அங்கே மோட்சத்தில் இடம் பிடிக்கலாம் என்று நம்புவார்கள். இப்படி எல்லோருக்கும் பயன்படுகின்ற இத் திருவிழாவில்- ரதோற்சவத்தில்-தேரின் மேலே எழுந்தருளுகின்ற மூர்த்தி யார் தெரியுமா? அவர் சோமாஸ்கந்த மூர்த்தி. திருவாரூரில் எழுந்தருளி உள்ள தியாகராஜ மூர்த்தி சோமாஸ்கந்தரே. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சோமாஸ்கந்தருக்குச் சந்நிதி இருக்கும். அவரை நாய்கர் என்று சொல்வார்கள். எல்லோரும் காணத் திருத்தேரில் வருகிற ஆண்டவன் நாம் எல்லாம் குடியும் குடித்தனமுமாக வாழவேண்டும் என்பதைக் காட்டுவதற்காக அவ்வாறு எழுந்தருளுகிறான். "நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்" என்று சோமாஸ்கந்த மூர்த்தியைப் பாடுகிறார் அப்பர் சுவாமிகள். அந்தக் காலத்தில் எல்லோரும் தேர் விழாவில் ஈடுபடுவார்கள். இந்தக் காலத்தில் தேர்தல் விழாவில்தான் கூட்டம் கூடுகிறது. அம்பிகை சில சமயம் கோபம் வந்தால், ஓடிவிடுவதைப் பார்க்கிறோம். அவ்வாறு ஓடாமல் இருக்க இப்போது முருகன் வந்துவிட்டான். அம்மையையும் அப்பனையும் பிணைப்பதற்கு ஒரு சங்கிலி போல அவன் எழுந்தருளியிருக்கிறான். முருகன் வந்த பிறகு அம்பிகைக்குக் கோபமே இல்லை. அம்மையையும் அப்பனையும் வணங்காமல் முருகனை வணங்கினால் கூட அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் வைத்தீசுவரன் கோவிலில் உள்ள முருகப் பெருமானைப் பற்றி ஒரு பிள்ளைத் தமிழ் பாடியிருக் கிறார். அங்கே இராமனும், இலக்குமணனும் வந்து வழிபட்டிருக் கிறார்கள். சிவபெருமானுக்குத் தீராத வினை தீர்த்த தம்பிரான் என்று பெயர். அம்பிகை தையல் நாயகி. அங்கே எழுந்தருளி யிருக்கும் முருகனுக்கு முத்துக்குமாரசுவாமி என்று பெயர். மூன்று பேர்களுக்குமே அங்கே சிறப்புண்டு. அத்தகைய தலத்திற்குத் திருமால் முதலிய தேவர்கள் மனித வேடம் புனைந்து வந்தார்கள். வந்து வரிசையாக நின்றார்கள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/160
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை