வீரர்களின் தோற்றம் 145 முருகன் செய்கின்ற திருவிளையாடல்கள் மேலும் வருகின்றன. இருள்கெழு பிலத்துள் வைகும் எண்தொகைப் பணியும் பற்றிப் பொருள்கெழு மேரு வாதி அடுக்கலில் பூட்டி வீக்கி அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும். (திருவிளையாட்டும். 94) [பிலம் - நாகலோகம், பணி - பாம்பு. அடுக்கள் - பா. வீக்கி - கட்டி. ஆவிகட்கு ஊது இன்றாக-உகிர்களுக்குத் துன்பம் இல்லாமல்.] பாதாளத்திலுள்ள பாம்புகளைப் பிடித்து, அட்ட திக்கில் உள்ள மலைகளில் கட்டி, தேர் போல இழுக்கிறான். மலைகள் எல்லாம் புரண்டு வந்தாலும், பாம்புகளே கயிறாக இருந்தாலும் எந்த உயிருக் கும் தீங்கு உண்டாக வில்லை. அவன் ஆற்றல் மிக்க குமரனாக இருக்கிறான். அதே சமயத்தில் அருள் நிரம்பியவனாகவும் விளங்கு கிறான். விளையாட்டில் கூட யாருக்கும் துன்பம் வரக்கூடாது என்று நினைப்பது தெய்வத் தன்மை. அசுரக் குழந்தை விளையாடினால் கணத்திற்கு ஆயிரக் கணக்கான உயிர்கள் மரணம் அடையும். முருகனோ தெய்வக் குழந்தை; கருணை வள்ளல். ஆகவே, அவன் செய்கிற விளையாட்டில் பார்ப்பதற்கு அச்சம் தோன்றினாலும் யாருக்கும் இடையூறு உண்டாகவில்லை; ஓர் எறும்புக்குக் கூடத் தீங்கு உண்டாகவில்லை. $ இந்திரன் எதிர்த்தல் + இந்திரன் முதலாய தேவர்களே இந்த விளையாட்டைக் கண்டு திகைத்தனர். நாம் இறைவனிடம் விண்ணப்பித்துக்கொண்டபடி திரு அவதாரம் செய்த முருகன் இவன்தான்' என்று அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. யாரோ தோற்றத்தில் குழந்தை மாதிரி இருக்கிறான். ஆனால் செய்கின்ற காரியங்களைப் பார்த்தால் அசுரக் குழந்தைபோலத் தோன்றுகிறது' என்று எண்ணினார்கள். நொய்தாம் குழவி எனக்கொள்கிலம்; நோன்மை நாடின் வெய்தாம் அவுணக் குழுவோரிலும் வெய்யன்; யாரும் எய்தாத மாயம் உளனால்; இவன் றன்கை வெம்போர் செய்தாடல் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார். (திருவிளையாட்டுப். 42.) • . [னொய்காம் - மென்மையான. நோன்மை - வலிமை. அவுணக் குழுவோரினும்- அசுரக் கூட்டத்தை விட வெய்யன் கொடியவன், ஆடல் கொள்வம் - சிவற்றி கொள்வோம். இவண் - இங்கே.] 19
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை