பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கந்தவேள் கதையமுதம் இப்படியே விட்டு இருந்தால் நமக்குப் பெரிய ஆபத்து வந்து விடுமே! இவன் யாரோ தெரியவில்லை. அசுராைகவும் தோன்ற வில்லை" என்று இந்திரன் பயந்தான். முருகனோடு போர் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.உடனே அவன் தேவர்களுடன் சேர்ந்து முருகனோடு போர் செய்தான். முருகன் விட்ட ஓர் அம்பினால் யுத்தம் முடிந்தது. இந்திரன் மயங்கி வீழ்ந்தான். தேவர்கள் விட்ட அம்புகளோ ஆண்டவனுடைய பாதத்திலே மலர்களைப்போல வீழ்ந்தன. பல பேர் இறந்தனர். பாதிப் பேர் ஒடிப்போனார்கள். அப்போது நாரதர் தேவகுருவாகிய வியாழபகவானிடம் வந்து செய்தியைச் சொன்னார். வியாழ பகவான் முருகப் பெருமானைப் பிழை பொறுக்கும்படி பிரார்த்தித்தார். 2 "அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்து அவர்களை எல்லாம் எழுப்ப வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அப் படியே ஆண்டவன் அவர்களை எழுப்பினான். அவர்கள் எழுந்து முருகப் பெருமானைத் துதி செய்யத் தொடங்கினார்கள். கந்தநம, ஐந்துமுகர் தந்தமுரு கேசநம, கங்கை உமைதன் மைந்ததம, பன்னிருபு பத்தநம, நீயமலர் மாலை யுனையும் தந்தைநம,ஆறுமுக ஆதிநம சோதிதம, தற்பமதாம் எந்தைநம, என்றுமிளை யோய்நம, குமாரநம, என்று தொழுதார். (திருவிளையாட்டும். 82.) (ஐந்து முகர் - சிவபெருமான். தீபமலர் - கடம்பூ - நம - நமஸ்காரம்.] நம: என்று அர்ச்சனை செய்வதுபோலத் திருநாமத்தைச் சொல்லி வணங்கினார்கள். "என்றும் இளையவனாக இருக்கின்ற எம்பெரு மானே, உன் பெருமையை நாங்கள் தெரிந்துகொள்ளவில்லையே !" என்று வருந்தினார்கள். முருகப் பெருமான் என்றும் இளையவனாக இருப்பவன். "என்றும் அகலாத இளமைக்கார" என்று அருணகிரிநாதர் சொல்வார். " என்றும் இளையாய் அழகியாய்" என்பது ஒரு பழைய பாட்டு.