148 கந்தவேள் கதையமுதம் இந்திராதி தேவர்கள் எவ்வளவுதான் சிறந்தவர்களாக இருந் தாலும் முருகனுடைய பெரிய வடிவத்தைக் காண முடியாமல் மலைத்தார்கள். பிறகு இறைவன் தெய்வத் திருக்கண்களைக் கொடுத்தவுடன் தான் அவர்களால் பார்க்க முடிந்தது. இறைவ னுடைய திருவருளின்றி எதையும் செய்ய முடியாது. ஆண்டவனே எல்லாவற்றையும் உணர்த்துகிறவன். அவன் உணர்த்தவில்லை யானால் உயிர்க் கூட்டங்கள் எதையும் உணர முடியாது. உணர்த்த உணரும் இயல்புடையவை ஆன்மாக்கள். அவன் உணர்த்தா வீட்டால் பசுக்கள் எதையும் உணரல் முடியாது. "காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே என்று அப்பர் சுவாமிகள் பாடுவார். இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பார்வை சரியான பார்வை அன்று. இப்போது தெளிவாகத் தெரிகிறது. என்னுடைய இடம். என்னுடையது அல்லாத இடம் என்று அல்லவா வேறு பிரித்துப் பார்த்தோம்? இது பிரமன் இருக்கும் இடம், இது திருமாலின் வைகுண்டம், இது இந்திரனது அமராவதி என்று வெவ்வேறாகச் சுட்டிக்காட்டிப் பார்த்தோம். இப்போதுதான் உண்மை தெரிந்தது. நீ உண்மையை உணர்த்தியதனால் அகிலம் எல்லாம் நீயாக விளங்கு வதைக் கண்டோம். இதுவரைக்கும் இந்த உண்மையை அறியாத தற்குக் காரணம் எங்களுடைய சிற்றறிவே. உன்னுடைய திருவரு ளால் தனியான ஞானக்கண்ணைப் பெற்று உண்மையை உணர்ந் தோம். இதற்குமுன் உன்னைக் காண முடியவில்லை. இப்போது எங்கே பார்த்தாலும் உன் வடிவம் தவிர வேறு எதையும் காண முடியவில்லை' என்று சொன்னார்கள். ஞானத்தால் வரும் பார்வை நாம் இந்த உலகத்தில் இறைவனைத் தவிர, மற்ற எல்லா வற்றையும் பார்க்கிறோம். அவன் நம்மைக் காட்டிலும் நமக்கு நெருக்கமாக இருக்கிறான். ஆனாலும் அவன் இருப்பதை நாம் நாடுவ தில்லை. நம்மைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் என்று தனித்தனியே பார்க்கும்போது பிறரைச் சேர்ந்தவர்களையே அதிகமாகக் காண் கிறோம். ஆனால் இறைவனுடைய திருவருளால் ஆன்மாவுக்கு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை