பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரர்களின் தோற்றம் 149 ஞானம் உண்டாகி, பார்வையில் தெளிவு ஏற்பட்டால் எல்லாம் ஒன்றாகத் தோன்றும்; எங்கும் இறைவன் மயமாகத் தோன்றும். இறைவனுடைய திருவருளால் ஞானம் பெற்ற பிறகு அவர் களுடைய காட்சி மாறுவதைத் திருமூலர் ஓர் அழகான பாட்டில் சொல்கிறார். அதைச் சற்று இங்கே பார்க்கலாம். காட்டு வாரியத்தில் வேலை செய்த ஒருவர் முதல் மனைவி இறந்துவிட்டதனால் 5.1-ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்குக் குழந்தையே இல்லை. 55-ஆவது வயதில் இரண்டாவது மளைவிக்குக் குழந்தை பிறந்தது. அவர் ஓய்வு பெற்றார். அப்போது குழந்தைக்கு மூன்று வயது. காட்டுப் பகுதியில் அதிகாரியாக வேலை செய்தவராதலின் பல மரங்களை வெட்டிக் கொண்டு வந்து சேர்த்திருந்தார். அவற்றைக் கொண்டு ஒரு பெரிய வீட்டைக் கட்டினார். கருங்காலி மரம், தேக்கு மரம், சந்தன மரம் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்தார். கருங்காலியைக் கொண்டு பெரிய பீரோ செய்தார் ; மேசை செய் தார். தம்முடைய அருமந்த குழந்தைக்கு என்ன செய்யலாம் என்று பார்த்தார். கடையில் இருக்கிற யானை சிறியதாக இருந்தது. வீட்டிலேயே கருங்காலி மரத்தைக் கொண்டு பெரிய யானையைச் செய்தார். அதற்கு அடியில் சக்கரங்கள் அமைத்தார். அவனை அந்த யாளைமேல் உட்கார வைத்துத் தாமே இழுத்தார். பக்தர் அதே ஊரில் வேறு ஓர் பகுதியில் முருக பக்தர் ஒருவர் இருந் தார். அவரது குடும்பத்திற்கு ஒரு கோவில் சொந்தமாக இருந்தது. எப்போதும் முருகனை நினைத்துக்கொண்டு எல்லாக் காரியங்களையும் செய்வார். எப்போதும் ஆறு, அறுநூறு,ஆறாயிரம்,ஆறு லட்சம் என்றே கணக்குப் பண்ணுவார். சண்முகநாதனுடைய ஆனதனால் எல்லாம் ஆறாக இருக்க வேண்டுமென்பது அவருடைய நினைப்பு. முதலில் அறுநூறு ரூபாயைக் கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினார். அறுநூறு ஆறாயிரமாகப் பெருகியது. ஆறாயிரம் ஆறு லட்சமாக வளர்ந்தது. முருகப்பெருமான் அருளாலே இவ்வளவு செல்வமும் உண்டானதால், தம்முடைய குடும்பக் கோவி லாகிய முருகன் கோவிலில் சிறப்பாகப் பல திருப்பணிகளைச் செய் தார். ஆண்டவனுக்குத் தேர் பண்ண வேண்டுமென்ற ஆசை உண்டா