குமர குருபரன் 157 உடையார் என்ற பட்டம் உடையவர்கள். அதனால்தான் அந்த ஊருக்கே உடையார்பாளையம் என்ற பெயர் வந்தது. அவ்வளவு படித்த பெரியவருக்கே ஜமீன்தாரைக் கண்டு மனம் நடுங்கி, வாய் குழறுமானால், எல்லாம் வல்ல சர்வக்ஞன் ஆன முருகப் பெருமானுக்கு முன்னாலே அகந்தையுடைய பிரமன் எப்படி நடுங்கி யிருப்பான் என்பதைக் கற்பனையினால் எண்ணிப் பார்க்கலாம். பிரணவத்தின் சிறப்பு அர்சன் மேவரும் பீடமாய், ஏளையோர் தோற்றும் வாச மாய், எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க் காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். (அயனைச் சிறைபுரி. 11.) (றைகட்கும்- வேதங்களுக்கும்; மந்திரங்களுக்கும் என்றும் சொல்லலாம். முடிபவர்க்கு - இறப்பவர்களுக்கு.} யானது. பிரணவம் என்பது பரமேசுவரன் எழுந்தருளிய பீடம். எல்லா எழுத்துக்களுக்கும் முதலானது. வேதங்களுக்கு எல்லாம் ஆதி அந்தமானது. வேதத்தின் வேர் என்று பெரியவர்கள் பிரணவத்தைச் சொல்வார்கள். காசியில் ஜீவர்கள் உயிர் விடும் போது அவர்கள் காதில் சிவபெருமான் ஓதுகிற மந்திரம் பிரணவந் தான். பிரணவம் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்ற மூன்றின் வடிவம். ஓம் என்பது அகார, உகார, மகாரங்கள் சேர்ந்த எழுத்து. அகரம் எல்லா எழுத்துக்களுக்கும் முதலானது. அதனைத் திருக்குறளின் முதல் பாட்டுச் சொல்கிறது. வாயைத் திறக்காமல் அந்த எழுத்தைச் சொல்ல முடியாது. எல்லா எழுத்துக்களிலும் அகரம் இணைந்திருக் கிறது என்று கூறுவார்கள். பரமேசுவரன் எல்லாப் பொருள் களிலும் கலந்து இருப்பதுபோல, அகரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து இருக்கிறது. அகரத்தை உச்சரிக்கும்போது வாய் திறக்கிறதே, அது சிருஷ்டி. உகரத்தைச் சொல்லும்போது இதழ் குவிகிறது. அது ஸ்திதி, பாதுகாப்பு. மகரத்தில் இதழ் மூடிக்கொள்கிறது. அது எல்லாவற்றையும் முடிக்கிற சங்காரத்தைக் காட்டுகிறது. இப்படி அகர, உகர, மகரங்கள் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரத்தைக் காட்டும்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை