158 கந்தவேள் கதையமுதம் ஒரு வகையில் எல்லாம் அற்ற சூன்யத்திலும், எல்லாம் நிறைந்த இடத்திலும் ஓங்காரம் இருப்பதைக் காணலாம். காலியாக இருக் கிற பானையில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி வரும். சூன்யமாக இருக்கும் இடத்தில் ஓம் என்பது இருக்கிறது. அதி லிருந்தே எல்லாம் பிறக்கின்றன. ஒரு சந்தையில் பல மக்கள் கூடி வியாபாரம் செய்கிறார்கள்; பொருள்களை வாங்குகிறார்கள். அவரவர் தனித்தனியே வெவ்வேறு வார்த்தைகள் சொல்கிறார்கள்: வெவ்வேறு மொழிகளில் பேசுகிறார். கள். அந்தச் சந்தையிலிருந்து சிறிது தூரத்தில் நின்று கேட்டால் அந்த வார்த்தைகள் முழுவதும் காதில் படுவதில்லை.ஓம் என்ற முழக்கமே காதில் படும். எல்லா ஒலிகளும் சேர்ந்த கூட்டு ஒலியாக ஓம் இருப்பதை அப்போது உணரலாம். ஒன்றும் இல்லாத சூன்யத் திலும் ஓம்காரம்; எல்லாம் நிறைந்தபோதும் ஓம்காரம். வேதத்தைத் தொடங்கும்போது பிரணவத்தைச் சொல்வார்கள்; முடிக்கும்போதும் ஓம் என்று முடிப்பார்கள். இந்தப் பிரணவத்திற்குப் பொருள் சொல்லத் தெரியாமல், நான்கு வேதமும் படித்த பிரமனே இப்படிக் கலங்கினான் என்றால் நாம் எல்லாம் எந்த மூலை என்று கச்சியப்பர் சொல்கிறார். தூம றைக்கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும் ஓம்எ னப்படும் ஓரெழுத் துண்மையை உணரான், மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால் நாம்இ ளிச்சில் அறிந்தனம் என்பது நகையே. பிரமனும் கலைமகளும் (அயனைச் சிறைபுரி.13.) மனிதர்களுக்கு மூன்று வகையில் அகந்தை உண்டாகும்; தாம் பெற்ற செல்வத்தாலும், தம் உடல் வலிமையினாலும், கல்வியினாலும் அகந்தை உண்டாகும். பிரான் கல்வியிலே சிறந்தவன். அவன் கலைமகளுக்கு நாயகன். அவனுடைய நாவில் கலைமகள் வாழ்கிறாள். $ நான்முகன் படைக்கின்றவன். புதியதைப் படைக்க வேண்டு மானால் அவனுக்கு அறிவு வேண்டும். படைப்புக் கலைகளை க்ரியேடிவ் ஆர்ட்' (creative art) என்று சொல்வார்கள். படைப்பைத் தொழிலாகக் கொண்ட பிரமனுக்கு அதற்குரிய அறிவு வேண்டும்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை