பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 விட்டார். கந்தவேள் கதையமுதம் ஒரு நாள் கச்சேரி நடந்தவுடனே, வெளி ஊருக்குப் புறப்பட்டு கூட வந்தவர்களும் அவருடன் சென்றார்கள். ரெயிலில் போகும்போது, "இன்றைக்குப் பேச நேரம் இல்லை. உங்கள் பாட்டு எப்படி இருந்தது என்பதை ரசிகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது போய்விட்டது" என்றார்கள். அதைக் கேட்டுச் சங்கீத வித்துவான் சொன்னார்; "நிச்சயமாக அவர்களும் ரசித்திருப் பார்கள். நான் ரசித்துப் பாடினேன்" என்றார். கலைஞன் தான் முதல் முதலில் தன் கலையை ரசிப்பான். ஒரு சிற்பி கல்லில் இறைவனது திருவுருவத்தை வடிக்கிறான். அந்தக் கல்லில் கால் வைத்து உட்கார்ந்து கொண்டுதான் அந்தச் சிற்பத் தைச் செதுக்குகிறான். விக்கிரகம் வடித்த பிறகு அதை உரியவர் களிடம் கொடுக்கிறான். அந்த விக்கிரகத்தைக் கோவில் கட்டி, பிரதிஷ்டை பண்ணி, கும்பாபிஷேகம் செய்கிறார்கள். அப்போது அந்தச் சிற்பி தானே தேங்காய் பழம் வாங்கிக்கொண்டு கோவிலுக் குச் சென்று, "என் பெயருக்கு ஓர் அருச்சனை பண்ணுங்கள் " என்று சொல்வான். நான் கால் வைத்து உட்கார்ந்து அடித்த கல்தானே?" என்று சொல்வானா? கலைஞன் தன் படைப்புக்குத் தானே முதல் ரசிகனாக இருக்கிறான். இதைத்தான் பிரமன் கலை மகளைக் கல்யாணம் செய்துகொண்டான் என்ற கதை விளக்கு கிறது. உலகத்தில் கணவன், மனைவி என்றுள்ள உறவாக நாம் எண்ணக் கூடாது. கலைஞனுக்கும் கலைக்கும் உள்ள தொடர்பை அங்கே காணவேண்டும். அகங்காரத்தின் விளைவு 58 ஆகவே, நல்ல கலைஞனாசு இருக்கிற பிரமன் இப்போது அகங் காரம் அடைந்தான். பணத்தினாலே அகங்காரம் உண்டானால் பணம் போனவுடன் அதுவும் அழிந்துவிடும். ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்." ஆதலால் மனித வாழ்வில் செல்வம் போனால் த அகங்காரம் போய்விடும். அப்படியே உடல் வலிவினால் அகங்காரம் உண்டானால் உடலில் தளர்ச்சி ஏற்பட்டபோது உடல் வலிமை காரணமாகத் தோன்றிய அகங்காரம் போய்விடும். ஆனால் கல்வியி னால் உண்டான அகங்காரம் எளிதில் போகாது. ஒரு பிறவியில் கற்ற கல்வி, பிறவிதோறும் தொடர்ந்துவரும் என்று சொல்வார்கள்.