பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர் குருபரன் 161. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து 33 என்று வள்ளுவர் சொல்கிறார். கல்வி தொடர்வதுபோல, அதனால் உண்டான அகங்காரமும் தொடர்ந்து வரும். ஆகையால் மற்றவர் களுக்கு வருகிற அகங்காரத்தைவிட, கற்றவர்களுக்கு வருகிற அகங் காரம் மிகவும் பொல்லாதது. பிரமன் மிகச் சிறந்த அறிவாளி. என்றாலும் அறிவாளிக்கும் குருவாக இருக்கிற முருகனைக் கண்டவுடன் கீழே வீழ்ந்து பணி யாமல், 'நாம் அறிவாளி' என்ற அகந்தையினால் நின்றான். இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டுமானால் முதலில் அகந்தை போகவேண்டும். அகந்தை இருக்கும் வரைக்கும் உண்மை யான பக்தி ஏற்படாது. இங்கே ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பாரதியின் மாணாக்கரும், சிறந்த தமிழ் எழுத்தாளருமாகிய வ.நா. என்பவர் ஒரு நாள் ஒன்று சொன்னார். ஓரிடத்தில் சொற்பொழிவு ஆற்றும்போது அந்தக் கருத்தைச் சொன்னார். ""இந்தத் தமிழ்ச் சாதி தன் பொறுப் பைத் தட்டிக் கழிக்கிற சாதி. தம் குற்றத்தை மற்றவர்கள்மேல் ஏற்றும் பழக்கம் தமிழர்களுக்கு இருக்கிறது. ரெயிலுக்கு நேரம் கழித்துப் போகிறான்; அது போய்விடுகிறது. அப்போது ரெயில் தப்பிவிட்டது' என்று சொல்கிறான். ரெயிலா தப்பிவிட்டது? இவன் ரெயிலைத் தப்பவிட்டான். வெள்ளைக்காரன் நேர்மையாக, நான் ரெயிலைத் தவற விட்டேன்' (I missed the train) என்று சொல்கிறான். . "முள்ளில் காலை வைத்துக் குத்திக் கொண்டுவிட்டு, முள் தைத்து விட்டது' என்று சொல்கிறான், வெள்ளைக்காரன், I ran a thorn' என்று உண்மையைச் சொல்கிறான். நாமே நம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, நம் குற்றத்தைப் பிறர்மேல் ஏற்றுகிறோம்' என்று பேசினார். அவர் அப்படிச் சொன்னபோது நியாயமாகத் தோன்றியது. ஆனால் பிறகு யோசனை பண்ணிப் பார்த்தேன். பழைய காலத்தில் ரெயில் இல்லை. முள் இருந்தது. முள்ளைக் குத்திக்கொண்டு, முள் தைத்துவிட்டது என்றுதான் சொல்லியிருப்பார்கள்.ஞானசம்பந்தப் 21