பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கந்தவேள் கதையமுதம் தன் சகோதரர்களிடம் சொல்லி அவனுடைய காலில் விலங்கு போடும்படி செய்து,கொண்டுபோய்ச் சிறையில் தள்ளினான், முருகன். கந்தகிரியில் ஒரு குகையில் இருந்த சிறையில் நான்முகன் அடைபட்டுக் கிடந்தான். முருகப் பெருமான் படைத்தல் பிறகு முருகப் பெருமானே படைக்கும் தொழிலை மேற்கொண் டான். ஒரு பேராசிரியர் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கி றார். அவருடைய பிள்ளை எஸ்.எஸ்.எல். சி. பரிட்சைக்குப் போகிறான். அவனுக்கு 'ட்யூஷன்' சொல்லித்தர வாத்தியாரை வைத்திருக்கிறார். அவர் இரண்டு நாள் வராவிட்டால், அந்தப் பேராசிரியரே அந்தப் பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டாரா? அது போல் எல்லாவற்றையும் ஆக்கிப் படைத்துப் பரிபாலிக் கின்ற முருகப் பெருமான், நான்முகன் காரியத்தைத் தானே செய்யத் தொடங்கினான் என்பதில் என்ன வியப்பு? ஒரு கரத்தில் ஜபமாலையையும், மற்றொரு கரத்தில் கலசத்தை யும் வைத்து, இரண்டு கரங்களில் வரதம், அபயம் காட்டி, பரம்பொரு ளின் மகனாகிய எம்பெருமான் ஒரு முகத்தைப் பெற்று, பிரமன் செய்கின்ற படைப்பைச் செய்யத் தொடங்கினான். ஒருக ரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன் காத லந்தளில் குண்டிகை தரித்திரு கரங்கள் வரத மோ யம்தரப் பரம்பொருள் மகள்ஓர் திருமு சுங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். (அயரைச் சிறைபுரி. 17.) (கண்டிகை வடம் - உருத்திராட்ச மா&ல பரித்து - தாங்கி. கமண்டலம். விதி - படைப்புத் தொழில்.) குண்டிகை எல்லா உயிர்களுக்கும் உயிராய் இருப்பவன் அவன். எல்லாச் சுடர்களுக்கும் மேலான சுடராக விளங்குகின்றவன். எல்லா வேதங் களுக்கும் முடிவுப் பொருளாக இலங்குபவன். படைத்தல் முதல் உள்ள செயல்களுக்கு எல்லாம் மூலகாரணமாக இருக்கிறவன். அப்படி இருக்கிற முருகப் பெருமான் பிரமனாக இருந்து படைப்புத் தொழில் செய்வதில் என்ன அற்புதம் இருக்கிறது?