பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர குருபரன் 165 உயிரி னுக்குயி ராகியே பரஞ்சுட, ரொளியாய் வியன்ம றைத்தொகைக் கீறதாய் விதிமுத லுரைக்கும் செயலி னுக்கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேன் அயனெ னப்படைக் கின்றதும் அற்புத மாமோ? [வியன் மறை - (அயுரைச் சிறைபுரி. 18.) விரிவான வேதம். விதி - படைத்தல்.] நூறு மைல் சைக்கிளில் போகின்ற ஆற்றல் உள்ள ஒருவன் ஒரு பர்லாங்குத் தூரம் சைக்கிளில் போனான் என்றால் அது ஆச்சரியம் ஆகுமா? அது அவனுக்குச் சிறு விளையாட்டு. இங்கே முருகப் பெரு மான் படைப்புத் தொழிலை விளையாடலைப் போலவே செய்தான். முருகப் பெருமானின் படைப்பு எப்படி இருந்தது? நான்முகன் பேத புத்தி உள்ளவன். பேத புத்தி உள்ளவன் படைப்பில் ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒன்று மற்றொன்றைப் போல இராது. முருகப் பெருமானின் படைப்பில் எல்லாம் ஒரே மாதிரி இருந்தன. முருகனால் படைக்கப்பட்டவர்கள் சுகப்பிரம்மம் மாதிரி உட்கார்ந்து விட்டார்கள். அவர்கள் காந்தக் குணமும், குற்றமும் இன்றி இருந்தார்கள். அவை இருந்தால்தான் தேவர்களை உபாசிப்பார்கள். அப்படியில்லாமல் அவர்கள் மக்களாகப் பிறந்த வுடனேயே முனிவர்களாக அமர்ந்துவிட்டார்கள். நோயாளியே இல்லாத ஊரில் டாக்டருக்கு என்ன வேலை? கடன் வாங்குகிறவர்கள் இல்லாவிட்டால் பாங்குக்கு என்ன வேலை? அது போல எல்லா உயிர்களும் மெய்ஞ்ஞான மூர்த்திகளாக இருக்கிற போது தேவர்களுக்கு உணவு இல்லை. மக்களோ எல்லாக் கர்மாக் களையும் விட்டு விட்டு யோகிகளாக அமர்ந்திருந்தார்கள். மனிதர்கள் வேள்ளி நடத்திப் பல காரியங்களைச் செய்தால்தான் தேவர்களுக்கு உணவு கிடைக்கும். இப்போது முருகப் பெருமான் படைத்த உயிர்கள். அத்தனையும் மெய்ஞ்ஞான நிலையில் இருந்தமையி னால் தேவர்கள் அவர்களைக் கவனிக்க வேண்டிய நிலையில் இல்லை. ஆகவே, தேவர்கள் எந்தச் செயலையும் செய்யாமல் உணவு பெறாமல் இருந்தார்கள். திருமுருகாற்றுப்படையில் நான்முகனைச் சிறையிட்ட செய்தி வருகிறது. நச்சினார்க்கினியர் அதைச் சொல்கிறார். ஆனால் அங்கே ஒரு வேறுபாடு. சூரசங்காரம் ஆன பிறகு நான்முகனைச் சிறையில்