பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்ர குருபரன் 1B7 திருமுருகாற்றுப்படையில் திரு ஆவினன்குடிபற்றி வருகிற போது இந்தச் செய்தி வருகிறது. நான்முகனைச் சிறையிலிருந்து மீட்பதற்குத் தேவர்கள் வருகிறார்கள். சிவபெருமான், திருமால், இந்திரன் முதலானவர்களும் வருகிறார்கள். முருகப் பெருமா னிடத்தில் செல்வாக்கு உடையவர்கள், அவனுக்குப் பிரியமானவர்கள் யார் என்று தெரிந்துகொண்டு, அவர்களை முன்னிட்டுக்கொண்டு வருகிறார்களாம். முதலில் முனிபுங்கவர்களையும், அடுத்துப் பாடும் கந்தர்வர்களையும் அனுப்பி, அவர்களுக்குப் பின்னால் இந்திராதி தேவர்கள் உள்ளே வருகிறார்கள். இப்படித் திருமுருகாற்றுப்படை சொல்கிறது. கந்தபுராணத்தில் முருகப் பெருமானின் இளமைத் திருவிளை யாட்டிற்குப் பிறகு பிரமனைச் சிறையீட்ட வரலாறு வருகிறது. பிரமன் சிறையில் இருக்க, முருகப் பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொண்டதனாலே, யாவரும் ஞானிகளாகத் தோன்ற. தேவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஆகையால் அவர்கள் சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள். "உன்னுடைய திருக்குமாரன் பிரமனைப் பிரணவப் பொருளைக் கேட்டான். அவன் சொல்லாமல் இருக்கவே, அவனைச் சிறையிலே தள்ளிவிட்டுத் தானே படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கி விட்டான். முருகப் பெருமான் உனக்கு எப்படிக் குமாரனோ, அப்படியே பிரமனும் உன்னுடைய குழந்தைதானே? பிரமன் மிகவும் வருத்தப்படுகிறான்" என்றார்கள் தேவர்கள். சுந்த வேளெனக் கஞ்சனும் ஐயநின் மைந்த னாம்; அவன் வல்வினை ஊழினால் அந்த மில்பகல் ஆழ்சிறைப் பட்டுளம் நொந்து வாடினன்; நோவுழந் தானரோ. (அயனைச் சிறை நீக்கு.7.) [கஞ்சன் -தாமரையில் வாழும் பிரமன்.] எல்லோருக்கும் விதி விதிக்கிறவன் நான்முகன். அவனுக்கு இத்தகைய வீதி வந்துவிட்டது. அவனுக்கு இந்த விதியை விதித் தவன் முருகப் பெருமான். அதை மாற்றுவதற்கும் முருகன்தான் வர வேண்டும். எல்லார் தலையிலும் எழுதுகிற பிரமன் தலையில் அவன் குட்டிவிட்டான். "அவன் தன் ஊழ்வினையினால் சிறை பெற்றனன்'