168 கந்தவேள் கதையமுதம் என்று தேவர்கள் முறையிட, சிவபெருமான் நந்தியை அனுப்பிக் குமாரனிடம் சென்று பிரமனை விடுதலை செய்யச் சொல் என்று அருளினான். முருகன் செயல் நந்தி முருகப் பெருமானிடம் வந்து கும்பிட்டு, "உன்னுடைய தந்தையார் பிரமனை விடுதலை செய்யச் சொன்னார்" என்று விண்ணப் பித்துக்கொண்டான். அதைக் கேட்ட முருகனுக்குக் கோபம் வந்து விட்டது. என்னும் முன்னம் இளையவன் சீறியே அன்ன ஊர்தி அருஞ்சிறை தீக்கலன்; நின்னை யும்சிறை வீட்டுவன் நிற்றியேல்; உன்னி ஏகுதி ஒல்லையில் என்றலும். [அன்ன ஊர்தி- அன்னத்தை வாகளமாக உடைய பிரம தேவன் வீட்டுவள் விழச்செய்வேன்.ஒல்லையில் - விரைவில்.] "இன்னும் கொஞ்ச நேரம் நீ இருந்தாயானால் உன்னையும் சிறைப் படுத்திவிடுவேன்" என்று முருகன் சினந்து கூறவே, நந்தி அங் கிருந்து புறப்பட்டுவிட்டான். சிவபெருமானிடம் சென்று முருகப் பெருமான் சொன்னவற்றைச் சொன்னான். அதைக் கேட்டு ஆண்ட வன் கோபம் கொண்டானா? உவகை கொண்டு புன்முறுவல் பூத்தானாம். முள் முளைத்த காதை விடப் பின் முளைத்த கொம்பு வலிது' என்பார்கள். அப்படி முருகப் பெருமான் மிடுக்கோடு இருப்பதை எண்ணிச் சிவபெருமான் உள்ளம் பூரித்தான். திருவள்ளுவர் சொல்லும் ஒரு குறள், "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்வரம் இனிது" என்பது. தன்னைக் காட்டிலும் தன் பிள்ளை அறிவு உடையவனாக இருந்தால், தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகுமாம். ஒருவன் வியாபாரி. அவன் இன்னது படித்தான் என்று யாருக்கும் தெரியாது. அவன் பையன் நன்றாகப் படித்து எம்.ஏ.ப் பரிட்சையில் தேர்ச்சி பெறுகிறான். அதைக் கண்டு தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வந்தவர்களிடம் சொல்கிறான்; "நான் எஸ்.எஸ்.எல்.கி. கூடத் தேர்ச்சி பெறவில்லை.இவன் எம்.ஏ.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/188
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை