பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கந்தவேள் கதையமுதம் மேல் உட்காரவைத்துக் கொண்டான்.பிறகு,"ஓம் என்பதற்குப் பொருள் தெரியவில்லை என்று பிரமனைத் தண்டித்தாயே; உனக்கு அதன் பொருள் வருமா?" என் று கேட்டான். அப்போது முருகன், "நீங்கள் கேட்கிறபடி இருந்து கேட்டால், நான் சொல்கிறபடி இருந்து சொல்வேன்" என்றான்; " பழைய காலத்தில் என்னுடைய அன்னைக்கு நீங்கள் பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்யும்போது யாரும் அறியாத வண்ணம் சொன்னீர்கள். அத்தகைய இரகசியத்தை நான் இப்போது வெளிப்படையாகச் சொல்லலாமா?" என்று சொன்னான். வ முற்றெருங் குணரும் ஆதி முதல்வகேள்; உலக மெல்லாம் பெற்றிடும் ஆவட்கு நீமுன் பிறர்உணராத வாற்றால் சொற்றதோ ரினைய மூலத் தொல்பொருள் யாகும் கேட்ப இற்றென இயம்ப லாமோ, மறையினால் இசைப்ப தல்லால்? (அயனைச் சிறைநீக்கு.38.) (இற்றென - இத்தகைய தென்று. மறையினால் - இரககியமாக.] . அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்த சிவபெருமான், "நீ இரகசியமாக எனக்குச் சொல்" என்று சொல்லித் தன் செவியைக் காட்ட, ழுருகப் பெருமான் பிரணவத்தின் பொருளை உபதேசித்தான். என்றலும் நகைத்து மைந்த, எமக்கருள் மறையின் என்னாத் தன்திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை என்னும் ஒன்றெரு பதத்தி னுண்மை உரைத்தனன்; உரைத்தல் கேளா நன்றருள் புரிந்தா ஜென்ப ஞானநா யகனாம் அண்ணல். ( அயனைச் சிறைநீக்கு.39.) [மறையின் -இரகசியமாக. குடிலை - பிரணவம்.] அந்த உபதேசத்தைக் கேட்ட சிவபெருமான் மகிழ்ச்சி மிகவும் கொண்டான். இப்படி முருகப் பெருமான் சிவபெருமானுக்கும் குருவாக இருந்ததனால் அவனைக் குமர குருபரன் என்றும், சாமி நாதன் என்றும்,தகப்பன்சாமி என்றும் சொல்வார்கள். இந்தத் திருவிளையாடலைப் பாராட்டி அருணகிரிநாதர் முதலிய பெருமக்கள் பலபடியாகப் பாடியிருக்கிறார்கள். ஓரிடத்தைப் பார்க்கலாம். அருணகிரியார் காட்டும் காட்சி பொதுவாக உபதேசம் பண்ணுகிற குருநாதர்கள் மாணவர் களின் வலது காதில் உபதேசம் பண்ணுவார்கள்.இங்கே சிவ பெருமானுக்கு முருகன் இரண்டு காதிலும் உபதேசம் பண்ணியதாக