குமர் குருபரன் பிரணவ மந்திரத்தை, சிவபெருமானுக்கு உபதேசம் பண்ணின முருகன் பிறகு அகத்தியருக்கும் உபதேசித்தான். ஆங்குறு குமரப் புத்தேள் அருமறைக் காதி யாகி ஓங்கும்எப் பொருட்கும் மேலாம் ஓரெழுத் துரையின் உண்மை நீங்கற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக் குதவி மற்றும் பாங்குறும் இறைவன் நூலும் பூரிவினால் உணர்த்தி னானால். (அயனைச் சிறைநீக்கு. 42.) [ஓரெழுத்து பிரணவம். → கிறுமுனிக்கு அகத்தியருக்கு இறைவன் நூல்- ஆகமம்.] சிவபெருமானுக்குச் சமானமானவர் அகத்தியர். ஆகவே. அவ ருக்கும் பிரணவ உபதேசம் செய்தான் முருகன். "சிவனைநிகர் பொதியமலை முனிவன்" என்று அருணகிரியார் அவரைச் சிறப்பிப்பார். திருமாலுடைய மகளிருக்கு அகுளுதல் அந்தச் சமயத்தில் சரவணப்பூம் பொய்கைக்குப் பக்கத்தில் இருந்த திருமாலின் குழந்தைகளாகிய அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இருவரும் முருகனிடம் வந்தார்கள். அவர்கள் முருகனை நாயகனாகப் பெறவேண்டுமென்று தவம் செய்துகொண்டிருந்தார்கள். இருவரும் எம்பெருமானிடம் வந்து வணங்கினார்கள். று "யாரையும் இப்போது- மணம் செய்துகொள்வதில்லை. பின்னாலே உங்கள் விருப்பப்படி உங்களை மணம் செய்துகொள்கி றேன்' என்று சொல்லிச் சுந்தரவல்லியிடம், "நீ சிவமுனிவனுடைய குழந்தையாக மான் வயிற்றில் பிறப்பாய். பிறந்து வேட அரசனால் வள்ளி என்ற பெயருடன் வளர்க்கப்பட்டு அங்கே காத்திரு; நான் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்" என்றான். பிறகு அமுதவல்லியைப் பார்த்து, "நீ இந்திரனிடத்தில் சென்று தேவ சேனையாக வளர்ந்து கொண்டிருப்பாயாக. உன்னை நான் வந்து திருமணம் செய்துகொள்கிறேன் " என்று அருள்பாலித்தான். 23
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/197
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை