பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கந்தவேள் கதையமுதம் மாதம், அதற்கு ஒரு மாதம்" என்றெல்லாம் சொல்லி முடிவில் எல்லாத் தண்டனைகளையும் ஒரேகாலத்தில் அநுபவிக்கவேண்டும்" என்று கொடுப்பார்கள். அதில் என்ன கடுமை இருக்கிறது? அதுபோல முருகன் சொல்லவில்லை. "முன்பு நான் காலில் தளை யிட்டேன். இப்போது காலில் விலங்கு பூட்டுவதோடு கூட, என் அடியவன் தலையில் எழுதிய கைகளுக்கும் விலங்கு போடு" என்று சொன்னான். "என்னை அவமதித்ததற்குக் கால் விலங்கு மட்டுந்தான். இப்போது என் அடியானின் பெயரைப் பட்டியலில் எழுதினான் ஆகையால் காலுக்கும் விலங்குபோடு, கைக்கும் விலங்கு போடு" என்றான். தனக்கு அபசாரம் செய்வதைவிட, தன் அடியார்களுக்கு அபசாரம் செய்தால், இரட்டிப்புத் தண்டனை கிடைக்கும் என்ற கருத்தை இதனால் தெரிவித்தான். கந்தர் அலங்காரத்தில் இப்படி அழகாக ஒரு காட்சியைக் கற்பனை செய்யும்படி பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். முருகப் பெருமானை நம்புகிறவர்களுக்குப் பிறப்பு இல்லை என்பதைத்தான் பிரமன் சிறையில் இருந்த கதை நமக்குப் புலப்படுத்துகிறது. .