184 கந்தவேள் கதையமுதம் படித்தது; கூர்மை நுட்பத்தைத் தெரிவிப்பது. வேலும், நீண்டு அகன்ற இலையும் கூர்மையான நுனியையும் உடையது. ஞானத்திற் குரிய இலக்கணங்கள் எல்லாம் வேலிலும் அமைந்திருக்கின்றன. வேலையே முருகனாக வைத்து வழிபடுவது உண்டு. முருகனுக்கு ஆறு முகம் இருப்பதுபோல வேலுக்கும் ஆறு பட்டைகள் இருக்கும். பழைய காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள கோவில்களைச் சிலப்பதிகாரம் சொல்லும் போது வேற்கோட்டம் என்ற கோவிலை யும் சொல்கிறது. அந்தக் கோவிலில் வேலை நட்டு, அதில் முருகனை ஆவாகனம் பண்ணி வழிபட்டார்கள். யாழ்ப்பாணத்தில் பல இடங் களில் வேலை நட்டு அதனையே முருகனாக வழிபடுகிறார்கள். ஆறுமுக நாவலர் அவதாரம் செய்த யாழ்ப்பாணத்து நல்லூரில் முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அங்கே வேலையே நட்டு வழிபட்டு வருகிறார்கள். மிகச் சிறந்த செல்வச் சந்நிதி என்ற கோயில் ஒன்று இருக்கிறது. தொண்டைமான் ஆறு என்ற ஊரில் அந்தக் கோயில் உள்ளது. அங்கே வேலை வைத்து முருகனாக வழிபடுகிறார்கள். பல பேர் அங்கே சென்று பிரார்த்தனை செய்துகொண்டு தங்களுடைய விருப்பம் நிறைவேறப் பெறுகி றார்கள். உரும்பராய் என்ற ஊரில் சிதம்பர சுப்பிரமணியன் கோயில் என்ற பெயரில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது. அங்கேயும் வேலை நட்டுவைத்து வழிபடுகிறார்கள். முருகப் பெருமானுடைய பிரதிநிதியாக வேல் பலவிடங்களில் விளங்கி வருகிறது என்பதை இவற்றால் தெரிந்து கொள்ளலாம். அதனால் அதன் சிறப்பு நன்றாகத் தெரிகிறது. கந்த புராணம், சிவபெருமானே முருகனுடைய கையில் வேலை வழங்கியதாகச் சொல்கிறது. ஆனால் சில இடங்களில் அம்பிகை யிடமிருந்து முருகன் வேலை வாங்கினான் என்று ஒரு வரலாறு வழங்குகிறது. பல ஊர்களில் கந்த சஷ்டி விழாவின்போது முருகப் பெருமான் அம்பிகையிடமிருந்து வேல் வாங்குகிற விழா நடந்து வருகிறது. இந்த பழக்கத்தையொட்டித்தான், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சங்காரம்' என்ற பழமொழி ஏற்பட்டது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/204
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை