பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கந்தவேள் கதையமுதம் கிரௌஞ்சம் என்பது அன்றிலுக்குப் பெயர். அதன் வடிவ முடையது கிரௌஞ்சகிரி. அன்றில் பட்சி காதலில் சிறந்தது. எப் போதும் ஆணும் பெண்ணுமாக ஒன்றியிருப்பது. காதலின் சிறப்புக்கு உதாரணமாக அன்றிலைச் சொல்வது வழக்கம். அன்புக்கு அடை யாளமாக இருக்கிற அன்றில் உருவத்தை எடுத்துக் கொடுமையில் சிறந்தவனாக இருந்தான் கிரௌஞ்சாசுரன்; சாதுக்களுக்குப் பல வித மான கொடுமைகளைச் செய்து வந்தான். தாரகாசுரன் அந்தக் கிரெளஞ்ச கிரியில் மாயாபுரிப் பட்டணத்தை அமைத்துக்கொண்டு தாரகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். முருகப் பெருமானை இப்போது நாரத முனிவர் வந்து தரிசித் தார். அவர் தாரகனைப் பற்றிய வரலாற்றைச் சொன்னார். முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரில் யானைமுகனாகிய தாரகாசுரன் திருமாலை எதிர்த்து நின்றான். அப்போது திருமால் தன் கையிலுள்ள சக்கரத்தை அவன்மேல் ஏவினார், அந்தச் சக்க ராயுதம் தாராகாசுரன் கழுத்தில் மாலையாக விழுந்தது. அத்தகைய வலிமையுள்ளவன் தாரகன் என்ற செய்தியை நாரதர் முருகனுக்குச் சொன்னார். நீ அவனைச் சங்காரம் செய்தால் சூரனைச் சங்காரம் செய்வது எளிது" என்று அவர் சொன்னார். வீரவாகு பொருதல் உடனே முருகப் பெருமான் வீரவாகு தேவரை நோக்கி, நவ வீரர்களுடன் சென்று முன்னால் செய்ய வேண்டியதைச் செய்து வை நான் வந்து முடித்து வைக்கிறேன் " என்று சொன்னார். எம்பெருமானுடைய ஆணையைப் பெற்ற வீரவாகு தேவர் நவ வீரர்களும் லட்சம் வீரர்களும் உடன் வர மாயாபுரிப் பட்டணம் சென்றார். அவருக்கும் தாரகாசுரனுக்கும் போர் நடந்தது. பூமியையே அம்மியாகவும், பூதங்களின் கால்களையே குழவியாகவும், இரத்தத் தையே நீராகவும் கொண்டு பூதப் படையை அரைத்துக் கலங்க அடித்தான் தாரகன், தன் கையிலுள்ள தண்டத்தை ஓங்கினான். அப்போது வானமே பிளந்தது. தரையில் அடித்தவுடன் தரை