பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரகன் வதை 189 திண்டாடினார். கிரௌஞ்ச மலைக்குள் புகுந்த வீரவாகு தேவரும், அவரோடு சென்ற படைவீரர்களும் அந்த மலை செய்த மாயத்தால் மயங்கிப் போனார்கள். எம்பெருமானுடைய தம்பியாகிய வீரவாகு தேவரே மயங்கி விட்டார் என்றால் அசுரருடைய மாயம் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்போது நாரதர் தாரகாசுரன்முன் தோன்றி, "சிவன் மகன் இப்போது தனியாக இருக்கிறான், நீ போருக்குப் புறப்படு" என்று தூண்டிவிட்டார். முருகன் போர்க்களம் வருதல் பிறகு நாரதர் முருகப் பெருமானிடம் வந்து, வீரவாகு தேவர் கிரௌஞ்ச மலைக்குள் மயங்கிக் கிடப்பதைச் சொன்னார். உடனே முருகன், படையின் பின்புறத்தில் இருந்தவன், முன்னாலே வந்து சேர்ந்தான். தாரகாசுரன் தன் கண் முன்னாலே முருகனைப் பார்த்தான். ஆண்வனை நேருக்கு நேராகப் பார்க்க எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். அவன் போர்க்களத்தில் ஆண்டவனைப் பார்த்தான் என்றாலும் ஆண்டவனது தரிசனம் தரிசனந்தானே? முருகனை நேருக்கு நேராகக் கண்கொண்டு பார்க்கத் தாரகன் புண்ணியம் செய்திருந்தான் என்று கச்சியப்பர் பாடுகிறார். முழுமதி அன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும் விழிகளின் அருளும் வேலும் வேறுன படையின் சீரும் அழகிய கரம்ஈ ராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமல ரடியும் கண்டான்; அவன்தவம் செப்பற் பாற்றோ! (தாரகன் வதை. 126.) (படை -ஆயுதம். ஆர்க்கும் - ஒளிக்கும்.] பாரதத்தில் கண்ணனது விசுவரூபக் காட்சி சில இடங்களில் வருகிறது. துரியோதனனிடம் தூதாகச் சென்றபோது, கண்ணனை ஒரு குழியில் விழச் செய்தான் அவன். அப்போது கண்ணன் விசுவ ரூபம் எடுத்துக்கொண்டான். அந்த விசுவரூபத்தை எல்லோரும் தொழுதார்கள். ஆனால் துரியோதனனோ சற்றும் அஞ்சாமல், அன்பு செய்யாமல் அகந்தையோடு இருந்தான். கண்ணனது விசுவ ரூபத்தைக் கண்டும் குருடனாக இருந்து விட்டான். அப்படியில்லாமல் இங்கே தாரகாசுரன் முருகப் பெருமானின் தெய்விக வடிவத்தைக் கண்டு வியந்தான்,