பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 190 கந்தவேள் கதையமுதம் தற்பமதுடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றல் சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு அனைத்தும் நோக்கி அற்புதம் எய்தி, நம்மேல் அமர்செய வந்தான் என்றல் சுற்பகை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். (நாரகன் வதை. 127. (தற்பம் - அகந்தை. இனைய ஆற்றால் -இவ்வண்ணமாக.] இவன் கற்பனை கடந்த ஆதிக் கடவுள்' என்று அவன் எண்ணி னான். அதன் பிறகு முருகனைப் பார்த்துப் பேசத் தொடங்கினான். 1. ) "சிவகுமாரனே, நீ பகைவன் அல்லவே! நாரணன், பிரமன், இந்திரன் ஆகியவர்கள்தாமே எனக்குப் பகைவர்கள்? சந்திரனைத் தலையில் தரித்த சிவபெருமானுக்கும் எங்களுக்கும் எந்த விதமான பகையும் இல்லையே! அவனுடைய குழந்தையாகிய நீ போர்க் கோலத்தோடு வந்தது என்ன ?" என்று அவன் கேட்டான். நாரணன் தனக்கும் மற்றை நான்முகன் தனக்கும் வெள்ளை வாரணன் தனக்கும் அல்லால் மதிமுடி அமல னுக்கும் தாரணி தனில்எ மக்கும் சமரினை இழைப்ப இங்கோர் காரணம் இல்லை மைந்தார வந்ததென் கழறு சென்றான். (தாரகன் வதை. 129.) [வெள்ளைவாரணன் - வெள்ளையானையை உடைய இந்திரன். சமர் - போர்.) சிவபெருமானை, 'மதிமுடி அமலன்' என்று மரியாதையாகச் சொன்னான்: 'மைந்தா' என்று செருக்கமுடையவனைப் போலப் பேசினான். , முருகப் பெருமான் கம்பீரத்தோடு சொல்கிறான். 36 அறச் செயல்கள் புரிகின்றவர்களுக்கு அருள் செய்கின்றவரும், அல்லாத வர்களுக்குத் தண்டனை அளிக்கின்றவருமாகிய பரமேசுவரர், தேவர்களை நீங்கள் சிறையில் அடைத்ததைத் திருவுளம் கொண்டு உங்கள் பலத்தை எல்லாம் அழித்துவிட்டு வரும்படி எம்மை விடுத்தார்" என்று கூறினான். "விடுத்தனன் எம்மை" என்று கம்பீரத்தோடு பேசினான். அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டம் செய்யும் இறையவன் ஆகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள் சிறையிட வைத்த தன்மை திருவுளம் கொண்டு நுந்தம் விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை என்றான். (தாரகன் வதை.136.} (தண்டம் செய்யும் - தண்டனை புரியும், விறல் - மிடுக்கு, சிந்த - அழிக்க,]