இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாரகன் வதை 195 துன்பம் உண்டாகுமா? அங்கே மயங்கி உறங்கினாலும் எங்களுக்கு எந்த விதமான வேதனையும் உண்டாகவில்லை. நாங்கள் சுகமாகத் தூங்குபவர்களைப் போல இருந்தோமேயன்றி, மலையின் மாயத்தால் துன்பத்தை அடையவில்லை " என்று சொன்னார்கள். யோகம் செய்பவர்களைப் போல அவர்கள் இருந்தார்களாம்.ஏம்பெருமான் திருவருளில் நம்பிக்கை உடையவர்கள் எந்தச் சமயத்திலும் அமைதி யாக இருப்பார்கள்; மற்றவர்களால் துன்பம் நேர்ந்தாலும் வருந்த மாட்டார்கள். செய்யவன் இளைய வாறு சீரருள் புரிய, வீரர், ஐயநின் அருள்உண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ? மையலோ டுறங்கு வார்போல் மருவும்இன் புற்ற தன்றி வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையும் என்றார். செய்யவன்-முருகன். சிறிதும்.] ஊறு - துன்பம். மையல் மயக்கம். இறையும். பிறகு முருகன் பூதகணங்களை எல்லாம் எழுப்பி, அவர்களுக்கு அனுக்கிரகம் பண்ணினான்.