முருகன் செந்தார் வருதல் தாரகனைச் சங்காரம் பண்ணின பிறகு முருகன் மேருவை அடைந்தான். அங்கே தேவர்கள் மயனைக் கொண்டு ஓர் அழகான மண்டபத்தை எழுப்பினார்கள்; அதில் முருகப் பெருமானை எழுந் தருளச் செய்து பூஜை செய்தார்கள். அசுரேந்திரன் சூரனிடம் செல்லுதல் தாரகன் இறந்ததைக் கேட்டு அவன் மனைவி சவுரி புலம்பினாள். ஆசுரம் என்ற இடத்திற்குப் போயிருந்த தாரகனுடைய புதல்வன் அசுரேந்திரன் அங்கே வந்தான், தாரகனை முருகன் கொன்றபோது அவன் எப்படியோ தப்பிப் போயிருந்தான். அவன் தன்னுடைய தந்தையாகிய தாரகனுக்கு ஈமக் கடன்களைச் செய்து நிறைவேற்றி னான். தாரகன் மனைவிமார்கள் அழல் புகுந்தார்கள். அசுரேந்திரன் சூரபன்மனிடம் வந்தான். மகேந்திரத்தில் எழுந்தருளியிருந்த சூரபன்மன் அவனைப் பார்த்து, "என்ன செய்தி?" என்று கேட்டபோது, அவன் தாரகனை முருகன் சங்காரம் செய்த செய்தியைச் சொன்னான். என்றலும் மைந்தன் சொல்வான்; இந்திரன் புணர்ப்பால்ஈசன் வன்திறல் குமரன் பூத வயப்படை, தன்னோ டேகி உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்சம் என்னும் குன்ருெடும் வேலால் செற்றுக் குறுகினன் புவியி லென்றன். (அசுரேந்திரன். 34 ) (மைந்தன் - அசுரேந்திரன். புணர்ப்பால் - சூழ்ச்சியால், வயப்படை - வலிமையை உடைய படை. குறுகினன் அடைந்தான்.) E - 6 "இந்திரனுடைய சூழ்ச்சியினால் சிவபெருமானுடைய குமாரனா கிய முருகப் பெருமான் பூதகணங்களுடன் வந்து தாரகனையும், கிரௌஞ்சத்தையும் தன்னுடைய வேலால் அழித்தான்" என்று சொன்னான். அப்படிச் சொல்லும் போது சூரனுக்கு உணர்ச்சி உண்டாவதற்காக, உன்றன திளவல் தன்னை ' என்றான். 'என்னுடைய தந்தையை' என்று சொல்லியிருக்கலாம். அது பரிதாபத்தை மட்டும் உண்டாக்கும். அப்படியின்றிக் கேட்கின்ற சூரபன்மனுக்கு வெறி உணர்ச்சி உண்டாக்க, உன்னுடைய தம்பியை என்று சொன்னான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/216
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை