முருகன் செந்தூர் வருதல் 204 திருவேங்கடத்தில் ஓர் அருவி இருக்கிறது. அதற்குக் குமார தாரை என்று பெயர். குமாரன் என்பது முருகன் பெயர்தானே? திருப்பதியில் வெள்ளிக்கிழமை தோறும் வில்வ அருச்சனை நடக்கி றது. திருமால் கோவிலில் வில்வ அருச்சனை நடப்பது அருமை. மேலும் அங்கே சிறப்பான அபிஷேகங்கள் பல உண்டு. இத்தகைய வற்றைக் காணும்போது முருகப் பெருமானின் சம்பந்தமும் அங்கே இருக்கிறது என்று தெரிகிறது. அதுமாத்திரம் அன்று. எல்லா மலைகளுக்கும் முருகன் தெய்வம். மலைகளும், மலைகள் சார்ந்த இடமும் குறிஞ்சி, குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன்தான். மலையில் மூர்த்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், வேறு மூர்த்தி இருந்தாலும் மலைக்குத் தலைவனாக அவன் இருக்கிறான். காளத்தி திருவேங்கடத்தைப் பார்த்த பிறகு முருகன் காளஹஸ்திக்கு வந்தான். காளஹஸ்தியில் சிலந்தி, பாம்பு, சிவகோசரியார்,யானை, கண்ணப்பர், நக்கீரர், எட்டுப் பெண்கள் ஆகியவர்கள் வழிபட்டார் கள். இதற்குத் தட்சிண கைலாசம் என்று பெயர். மற்ற எல்லோ ரும் வழிபாட்டினால் வணங்கினார்கள். நக்கீரர் பாட்டால் வணங்கினார். சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன் மலைத்தி டும்சிலை வேட்டுவன் கீரனே மடவார் பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினால் பரனைக் கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையும் கண்டான். (வழிநடைப்.7.) [மாசணம் - பாம்பு. சிரை -வில், வேட்டுவன் - கண்ணப்பன். கீரன் - நக்கீரன்.] நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடினவர். திருமுருகாற்றுப் படை தமிழில் மிகப் பழைய நூல்களாகிய 36-இல் முதலாவதாக இருப்பது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்று மூன்று வகைகளாகப் பழைய நூல்களைச் சொல் வார்கள். இந்த மூன்றிலும் உள்ள நூல்கள் 36. இந்த மூன்று வரிசையிலும் முதலாவதாக இருப்பது பத்துப்பாட்டு.36 நூல் களுக்கும் முதலாவதாக இருப்பது திருமுருகாற்றுப்படை. பத்துப் பாட்டிலும் முதல் பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை. 26
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/221
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை