பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் செந்தூர் வருதல் 207 சேய்ஞலூரில் முருகப் பெருமான் இந்திரன் முதலியவர்களோடு சில காலம் தங்கியிருந்தான். அப்போது சிரபுர வனத்துத் தெய்வம் சீர்காழியில் இந்திராணி வைத்த ஆபரணங்களைக் கொண்டுவந்து இந்திரனிடம் காட்டியது. இந்திராணி மேரு பர்வதத்தில் தனியாக இருந்தாள்.இந்திராணியின் நினைவு வர, அவளை நினைந்து இந்திரன் வருந்தினான். அவளுடைய நகைகளைக் கண்டபோது அவனுடைய துன்பம் மிகுதியாயிற்று. காமநோய் கொண்டான். இங்கே கச்சி யப்ப சிவாசாரியார் இந்திரனுடைய விரகதாபத்தை மிக விரிவாகப் பாடியிருக்கிறார். ஒன்றே ஒன்றை மாத்திரம் பார்க்கலாம். விரகதாபம் உடைய வர்களுக்குக் குயில் கூவினால் வருத்தம் உண்டாகும். வசந்த காலத் தில் குயில் கூவும். காதலர்கள் வசந்த காலத்தில் இணைந்திருக்க வேண்டும். குயில் கூவும் போது காதலர்கள் இணையாமல் இருந் தால் அப்போது அவர்களுக்குப் பிரிவினால் மிக்க துன்பம் உண்டா கும். ஆகவே குயிலை வெறுப்பார்கள். இரவில் அவர்களுக்குத் தூக்கம் வராது. 'விடியாதா? கோழி கூவாதா?" என்று நினைப்பார் கள். குயில் கூவுவதும், கோழி கூவாமல் இருப்பதும் அவர்களால் வெறுக்கத் தக்க செயல்கள். இந்திரன் அப்படித்தான் இருந்தானாம். 'ஏன் குயில் கூவுகிறது? ஏன் கோழி கூவவில்லை?' என்பதற்குக் காரணம் சொல்கிறான். அந்த இரண்டு பறவைகளுக்கும் இந்திரனி டம் கோபம் உண்டு. தக்க யாகத்தின் போது இந்திரன் குயிலாக ஓடினான் அல்லவா ? அடுத்து அகலிகையைச் சேர வேண்டுமென்று எண்ணிக் கோழியாக வந்து கூவினான். அவைகளுடைய உருவத் தை எடுத்துக் கொண்டு தவறு செய்தேன் என்பதை எண்ணியே அந்தப் பறவைகள் எனக்குத் துன்பத்தைச் செய்கின்றன. குயில் தன்னுடைய குரலைக் காட்டித் துன்பத்தைச் செய்கிறது. கோழி கூவாமல் இருந்து எனக்குத் துன்பத்தைச் செய்கிறது. இப்படி இரண்டு பறவைகளும் என்னுடைய உயிரைக் கொள்ளுகின்றனர் என்று இந்திரன் நினைத்தான். நம்மூரு ஆயினன் நாகர் கோன்எனாத் தம்மனம் உன்னியே தளர்வு நீக்கில; கொம்மென அரற்றியும் கூவல் இன்றியும் எம்முயிர் கொள்வன இருபு ளாம் என்பான். 1 குமாரபுரிப்.49.) [நாகர்கோன் - தேவராஜாவாகிய இந்திரன். இரு புள் - குயிலும் கோழியும்.]