பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கந்தவேள் கதையமுதம் போல வேதம் இருக்கிறது; இன்னது செய்க, இன்னது செய்யற்க என்று சொல்கிறது. அந்த வேதம் ஏன் அப்படிச் சொல்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கையைச் சரியானபடி நடத்தி வர முடியாது. ஆகவே வேதத்தைத் தலைவன் கட்டளை போல வைத்துப் பிரபு சம்மிதை என்று சொல்வார்கள். י அடுத்தபடியாக உள்ளது ஸுஹ்ருத் சம்மிதை. அது நண்பர் வார்த்தையைப் போன்றது. ஸ்மிருதிகளை ஸுஹ்ருத் சம்மிதை என்பார்கள். காலத்திற்கு ஏற்றபடி நமக்கு அறிவுரை சொல்பவர் நண்பர். எந்த இடத்தில் எந்தக் காரியம் செய்கிறோமோ அதற் கேற்றபடி அறிவுரையை அவர்கள் கூறுவார்கள். சுருதி என்று சொல்கிற வேதம் என்றைக்கும் ஒரேமாதிரி இருக்கும். ஆனால் ஸ்மிருதியோ சுருதியை அனுசரித்து, இன்ன இன்ன காலத்தில் மனிதர்கள் இன்னபடி நடக்கவேண்டுமென்று அவர்களுடைய தர்மத்தை வரையறை செய்யும். ஆகவே, காலத்திற்குக் காலம் ஸ்மிருதி வேறாக அமையும். ஒருகாலத்தில் ஒரு ஸ்மிருதி இருந்தால் நாளடைவில் வேறு பெரியவர் வந்து தங்கள் காலத்திற்கேற்றபடி ஒரு ஸ்மிருதியைச் செய்வார். இப்போது இருக்கிற மனுஸ்மிருதி மனு அமைத்தது. இப்படி மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி எனப் பல ஸ்மிருதிகள் உண்டு. அடுத்தது காந்தா சம்மிதை. காந்தா என்பது மனைவியைக் குறிக்கும் சொல். காவியங்களைக் காந்தா சம்மிதை என்று சொல் வார்கள்.மனைவி எப்படி இங்கிதமாகத் தன் கருத்தைத் தெரிவிப் பாளோ அப்படிச் சொல்வது காவியம். அவளுடைய சொல்லிலும், பொருளிலும் இன்பம் உண்டாவதுபோல் இருப்பது காவியம். ஒரு பெண் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். தான் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கே சமலா ஒரு புதுப் புடைவையை உடுத்துக் கொண்டு வந்தாள். அந்தப் புடைவை நன்றாக இருக்கிறது என்று நான் சொன்னேன். அதை நீ உடுத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாள்" என்கிறாள். அந்தப் புடைவையைத் தனக்கு வாங்கி அளிக்கவேண்டும் என்பதையே அவள் அந்தமாதிரி சுற்றி வளைத்துச் சொல்கிறாள். அந்தக் குறிப்பை உணர்ந்து கணவன்