210 கந்தவேள் கதையமுதம் முன்னால் அமெரிக்காவில் கோதுமை அமோகமாக விளைந்ததனால் மிச்சமானதைக் கடலில் கொண்டு போய்க் கொட்டினார்கள் என்ற செய்தி வந்தது. அதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் குறைந்தது. காரணம், கடலில் கொண்டுபோய்க் கொட்டுவதற்காக ஏன் இவ்வளவு சிரமப்பட்டு உற்பத்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டது. அது இயல்பு. எவ்வளவு அதிகமாக உற்பத்தியானாலும் அதற்கு மிக உயர்ந்த பயன் இருக் கிறது என்று தெரிந்தால் யாரும் இத்தகைய சோர்வு உணர்ச்சியை அடையமாட்டார்கள். இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது போன்ற செயல் வேறு இல்லை, ஆகவே எத்தனை மிஞ்சினாலும் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் வகையில் பழக்கங்களை வைத் திருந்தார்கள். இப்போதுதான் அத்தகைய வளம் இல்லையே என் பதற்காக அந்தப் பழக்கங்கத்தை விட்டு விட்டால் அடியோடு மறந்து விடும். ஆகவே ஒரு சொட்டுப் பாலாவது அபிஷேகம் செய்கிற பழக்கம் நம்மிடையே இருப்பது நல்லது, அது மாத்திரம் அன்று. நாம் ஒருவரிடத்தில் மிகவும் பிரியமாக இருந்தால் அவருக்கு அதிகமாக உபசாரம் செய்து உணவு வகைகளைக் கொடுப்போம். அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் நாம் வற்புறுத்துவோம். அது போல நாம் எந்த எந்தப் பொருள்களை விரும்புகிறோமோ அவற்றை எல்லாம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்வது நம் வழக்கமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் ஒரு நகரம் என்று சொன்னால் அதற்குச் சில இலக்கணங்கள் வேண்டும். நாம் நன்றாக உலவி வர மைதானம் வேண்டும். பூஞ்சோலைகள் வேண்டும். தார்ச் சாலைகள் வேண்டும். இவற்றை எல்லாம் அதிகமாகப் பெற்ற பெரிய நகரங்களுக்குப் பெருமை அதிகம். அந்தக் காலத்தில் ஒரு பெரிய நகரம் என்றால் பெரிய கோவில் இருக்கும். அந்தக் கோவிலின் பிராகாரங்கள் பெரியனவாக இருக்கும். அந்தப் பிராகாரங்களில் நந்தவனம் இருக்கும். காலாற ஒரு முறை பிராகாரத்தைச் சுற்றி வந்தால் போதும். நல்ல ஆரோக்கியமான காற்று, மூலிகைகளுடன் சேர்ந்த காற்று, உடலை வளம் பெறச் செய்யும். கோவில் முழுவதும் சிறந்த கலைச்சாலைகளாக இருந்தன. இப்போது நகரத்தில் பொருட்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/230
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை