பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கந்தவேள் கதையமுகம் வேக வெய்யவன் கடையுற தவ்வன மிசையே போக ஓரிறை எழுந்தழல் சுட்டது போலும்! ஏகு தேரொரு காலிலா திழந்ததால்; இருகால் பாகி ழந்தனன்) அவன்கதிர் அங்கியட் டனவே. " (சுரம்புகு. 9.) [ வெய்யவன் -சூரியன். இறை தணம். ஒருகால் ஒரு சக்கரம், பாகு - பாகன் ] இத்தகைய பாலைவனத்தினூடே முருகப் பெருமான் தன்னுடைய படைகளுடன் சென்றான். அவன் போனதனால் பாலைநிலம் குளிர்ந்து விட்டது. மழை பொழிந்தால் எப்படி நிலம் குளிர்ந்து புல்பூண்டுகள் வளம் பெற்றிருக்குமோ அது போல ஆண்டவன் சென்ற பாலைநிலம் குறிஞ்சி நிலம் போல ஆகிவிட்டதாம். இன்ன தாகிய பாலையஞ் சுரத்திடை இறைவன் தன்ன தாகிய தானைக ளொடுந்தலைப் பட. டலும் மின்னு மாமூகில் பொழிந்தபின் தண்ணளி மிக்கு மன்னு கின்றபூங் குறிஞ்சிபோல் ஆயதவ் வனமே. (ஈரம்புகு.20.) (சுரம் - வழி. குறிஞ்சி - மலையும் மலையைச் சார்ந்த இடமும்.] மிகவும் தூயவனாகிய ஆண்டவன் அருள்மயமாக இருக்கிறான். அவன் பாலைவனத்தில் சென்றதனால் பாலையின் வெம்மை அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் அருளால் அது குளிர்ந்தது. அவன் தான் போகிற இடங்களை எல்லாம் குளிர்ச்சியாகவும், புனிதமாகவும் ஆக்குகிறவன். பசுகரணங்கள் எல்லாம் இறைவனுடைய தொடர்பால் பதி கரணம் ஆகிவிடும் என்பது சாத்திரம். அது போல இறைவன் போன பாலைநிலம் குறிஞ்சி நிலம் ஆகிவிட்டது. முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம். அவன் போனதால் பாலையும் குறிஞ்சியாகிவிட்டது. காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம் ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல் ஏதும் நீர் இலா தழல்படு வெய்யகான், இளையோள் போத லால்குளிர் கொண்டது, நறுமலர்ப் பொழிலாய். - (சுரம்புகு.22) [அலமரும் - உழல்கின்ற. ஆருயிர்க் கரணம் பசுகரணம். அவளது - புதிகரணம். கான் - பாலை.) கங்கையின் சிறப்பு நம்முடைய நாட்டிலே தீர்த்தங்களுக்கும், கோவில்களுக்கும் பெருமை கூறுவார்கள். தென்.கூட்டில் கோவில்களுக்கு விசேஷம்.