பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. முருகன் செந்தூர் வருதல் 215 வடநாட்டில் தீர்த்தங்களுக்கு விசேஷம். எல்லா ஆறுகளிலும் சிறந்தது கங்கை. உலகத்தில் மிக நீளமான நதி நைல் நதி. மிக அகலமான நதி நதி அமேசான். அத்தகைய நீளமோ, அகலமோ உடைய நதி அல்ல கங்கை ஆனால் அவை எல்லாவற்றுக்கும் இல்லாத தனிச் சிறப்பு, கங்கைக்கு இருக்கிறது. "இன்னறுநீர்க் கங்கையா றெங்கள் யாறே" என்று பாரதியார் பாடினார். காரணம் என்ன? ஆற்றுக்குப் பெருமை அதனுடைய நீளமோ, அகலமோ அன்று. அதிலுள்ள தண்ணீ ரினால்தான் அது பெருமை பெறுகிறது. நாங்கள் வசிக்கிற ஊரில் ஒரு நதி இருக்கிறது. ஆனால் யாரும், "நான் கூவம் நதிக் கரையில் வசிக்கிறேன் ' என்று பெருமைப்பட்டுக் கொள்ள மாட்டோம். அது நதியா? வெறும் சாக்கடைத் தண்ணீர் ஓடுகிற கால்வாயாகத்தான் இருக்கிறது. கங்கை அத்தகையது அன்று. உலகத்திலுள்ள எல்லா ஆறுகளிலிருந்தும் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து தனித்தனி யாகச் சில மாதங்கள் வைத்திருந்தால், புழுப் புழுத்துவிடும். ஆனால் கங்கைத் தண்ணீர் எத்தனை மாதங்கள் ஆனாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புழுக்காது. இமாசலத்திலிருந்து வருவதனால் அது அவ்வளவு தூயதாக இருக்கிறது என்று சொல்லலாம். , அங்கிருந்து வருகிற சிந்து, பிரம்மபுத்திரா நதிகளுக்கு இந்தப் பெருமை இல்லை. கங்கைநீர், வருகிற இடத்தில் அழுக்குச் சேராமல், விஞ்ஞான முறைப்படி பாதுகாக்கப்படுகிறது என்று சொல்லலாம். அப்படி ஒன்றும் கிடையாது. பலபல நகரங்களின் வழியாக வருகிற கங்கையில் அந்த அந்த நகரங்களின் சாக்கடைகள் விழுகின்றன். அதுமாத்திரம் அல்ல. இந்த நாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. காசியில் இறந்தால் மோட்சம் என்று சொல்வார்கள். ஆகவே, கிழங்கள் காசிக்குப் போய் இறந்துவிடுவார்கள். அவர்களது சரீரத்தைச் சிதையில் வைத்துத் தீயிடுவார்கள். பாதி வெந்ததும் வேகாததுமாகக் கங்கையில் இழுத்துவிடுவார்கள். சாக்கடைகளும், சாகும் கட்டைகளும் கங்கையை அழுக்காக்குகின்றன.இப்படி எத்தனை அழுக்குப் படிந்தாலும் இவற்றால் கங்கை தன் புனிதத்தை