பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கந்தவேள் கதையமுதம் இழப்பதில்லை.அதனோடு சேர்ந்த பொருள்கள் புனிதமாகின்றன. அதற்குக் காரணம் என்ன? கங்கையில்தான் முருகப் பெருமான் வந்தான் என்று முன்பே நாம் பார்த்தோம். அதனால்தான் காங்கேயன் என்று பெயர். அவனைக் கங்கை தாங்கியதால்தான் அது புனிதம் அடைந்தது. புனிதமற்ற எத்தனை காரியங்களைச் செய்தாலும் அதன் புனிதம் மாறவில்லை. கங்கைக்குப் புனிதம் தந்த புனிதனாகிய ஆண்டவன் பாலைநிலத்தின் வழியாகச் சென்றபோது அது தண்ணிய பூம்பொழி லாயிற்று என்பது என்ன ஆச்சரியம்? முனிபுங்கவர்கள் எங்கிருந்தாலும் அது சோலையாக இருக்கும். காரணம், அவர்களுடைய எண்ணம் குளிர்ச்சியாக இருப்பது. நாமோ பொல்லாத எண்ணங்கள் கொண்டிருக்கிறோம். பொறாமை கொண் டிருக்கிறோம். நம்முடைய உணர்ச்சியின் கொதிப்பு மூச்சுக்காற்று வழியாக வருகிறது. நல்ல புல்பூண்டு இருக்கிற இடத்தில் மனிதன் மூச்சுக்காற்றுப் பட்டால் அழிந்துவிடும். விசுவாமித்திரர் இராமபிரானை அழைத்துச் சென்றபோது அரண்யத்தில் பாலைவனம் தோன்றியது. "திடீரென்று இது என்ன இப்படி இருக்கிறதே !" என்று இராமன் கேட்டான். அப்போது விசுவாமித்திரர்,"பாவி, பாதகி, தாடகை கண்பட்டு இந்த இடம் பாலை ஆயிற்று" என்று சொன்னார். ஆனால் இராமன் காட்டில் போனபோது கல்லெல்லாம் கள்ளுடை மலர்களே போல் ஆயின என்று கம்பன் பாடுகிறான். பொல்லாதவர்கள் கண்பட்டால் நல்ல இடமும் பட்டுப் போகும். நல்லவர்கள் கண்பட்டால் பொல் லாத இடமும் நல்லதாகும். முருகப் பெருமானுடைய சம்பந்தத்தால் பாலை நிலம் சோலை நிலம் ஆயிற்று. ஜீவன் முக்தி இதற்குக் கச்சியப்பசிவாசாரியார் சொல்கிற உவமை இந்த நாட்டுக்கே உரிய சிறப்பான உவமை. மற்ற மதங்கள் எல்லாம் இறைவனது திருவருளைப் பெற வேண்டுமென்றே பாடுபடுகின்றன. இந்த உடம்பில் இருக்கும் போது வழிபட்டால் இந்தப் பிறவிக்குப் பின் மோட்சத்தைப் பெறலாம் என்று மற்றச் சமயங்கள் சொல்கின்றன.