முருகன் செந்தூர் வருதல் 27.7 இந்து சமயம்,உடம்பு இருக்கும்போதே மோட்ச இன்பத்தை அடையலாம் என்று சொல்லும். இந்த நிலையை ஜீவன் முக்தி என்று கூறுவார்கள் பெரியவர்கள். இந்த உடம்பே நமக்கு இப் போது துன்பமாக இருக்கிறது. கருவி கரணங்கள் எல்லாம் நம் முடைய அறியாமைக்குத் தூபம் போடுகின்றன. ஆண்டவன் திரு வருளால் அனுபவம் பெற்ற பிறகு இந்தக் கருவி கரணங்களே நமக்கு நலம் செய்யும். அப்போது பதிகரணம் ஆகிவிடும் என்று சொல் வார்கள். "பொய்ச்சினத்தை மாற்றி மெய்ச்சினத்தை ஏற்றிப் பொற்பதத்துள் ஆக்கு புலியூரா (தினம்-சின்னம், கரணங்கள்.] என்கிறார் அருணகிரியார். இத்தேகமொடு காண்பனோ" என்று தாயுமானவர் பாடுகிறார். பார்வைக்கு நம்மைப் போலவேதான் ஜீவன் முத்தர்களும் தோற்றுவார்கள். அப்படியானால் அவர்களை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வீட்டுப் பெண்மணி கார்த்திகைக்குப் பொரி பொரிக்க வேண்டுமென்று இரண்டு படி நெல் வாங்கி வந்தாள். வாணலியில் மணலைக் கொட்டி ஒரு படி நெல்லை இட்டு வறுக்கத் தொடங்கினாள். அந்தச் சமயம் அவசரமாக அந்தப் பெண்மணியை ஒருவர் வந்து அழைக்க, இன்னும் பொரியாகாமல் இருந்த நெல்லை எடுத்துவைத்து விட்டுப் போய்விட்டாள். வாணலியில் கொட்டாமல் இருந்த ஒரு படி நெல்லும், வாணலியில் கொட்டிச் சூடேறின ஒரு படி நெல்லும் பார்வைக்கு ஒன்றாகவே இருந்தன.ஆனாலும் வறுத்த நெல்லைப் பூமியில் போட்டால் முளைக்காது. அதுதான் வேறுபாடு. அப்படித் தான் ஞானக்கனலால் வறுக்கப்பட்டவர்கள் ஜீவன் முக்தர்கள். மறுபடியும் உலகத்தில் அவர்கள் முளைக்கமாட்டார்கள். அவர்களுடைய பசுகரணம் எல்லாம் பதிகரணமாக மாறிப் போய்விடும். 28
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/237
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை